Sunday 21 May 2017

மக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாமை கவுரப்படுத்திய அமெரிக்காவின் நாசா......


ஓராண்டுக்கு முன் சர்வதேச விண்வெளி நிலையத்தில்,மனிதனின் வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா வடிவ புதிய நுண்ணுயிரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நுண்ணுயிரிக்கு,மண்ணைவிட்டு
மறைந்தாலும் மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும்  மக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாமின் பெயரை வைத்து,அதனை கண்டுபிடித்த நாசாவின் ஜெட் புரோலிபியன்
ஆய்வக விஞ்ஞானிகள்
கவுரப்படுத்தியுள்ளனர்.

ஆமாங்க.....

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படும் அந்த
அரியவகை நுண்ணுயிரினத்துக்கு சொலிபாசில்லஸ் கலாமி (Solibacillus kalamii ) என்று பெயர் சூட்டியுள்ளனர்.

பெயர் சூட்டிய நாசாவை வாழ்த்தி நாமும் தமிழனாய் பெருமை கொள்வோம்....

No comments:

Post a Comment