Monday 7 November 2016

மைக்ரோ-மர்மங்கள்(மதுபானம்)-5


மதுபான விற்பனையில்
இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எதுவென்று தெரியுமா.....?

நம்ம தமிழ்நாடு தான்.........

இதில் நீங்கள் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.ஏன் என்றால்,அதை வைத்து தானே இலவசங்களை நமக்கு காலம் காலமா நமது ஆட்சியாளர்கள் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

சரி விடுங்க.........நான் விசயத்திற்கு வருகிறேன்.

அந்த மதிமயக்கும் மதுபானங்கள் உருவாக நுண்ணுயிர்கள் தான் காரணம் என்றால்.....நம்பமுடிகிறதா....?

என்னடா புதுசா இருக்கேனு நினைக்குறீங்களா..........உங்களுக்கு இது புது விஷயமாக தெரிந்தால் உங்கள் அறிவுக்கு எட்டிய விஷயம் அவ்வளவு தான்........

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு
மேலாக இவை மூலமாக தான் தயார் ஆகிறது என்றால்,நீங்கள் நம்பித்தான் ஆகணும்.நம்மூர் சுண்டக்கஞ்சி, கள்ளு மட்டுமல்ல உயர்வகை வெளிநாட்டு மதுவகைகளான பீர்,ஒயின் என அனைத்தும்,இந்த வகை நுண்ணுயிர்கள் இல்லாமல் தயாரிக்க சாத்தியமில்லை.

அப்படி என்னத்த இந்த கண்ணுக்கு தெரியா உயிர்கள் செய்கிறது என்பதனை பார்ப்போம் வாங்க.....


பொதுவாக பீர் இரண்டு வகை உண்டு.
ஒன்று அலே(ale),
மற்றொன்று லெகர்(lager).

அலே(ale) வகை பீர் உற்பத்தி செய்ய சக்கரோமைசிஸ் செர்விஸியே
(Saccharomyces cerevisiae)
எனும் ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.


லெகர்(lager) வகை பீர் உற்பத்தி செய்ய
சக்கரோமைசிஸ் உவேரம்
(Saccharomyces uvarum)
பயன்படுத்தப்படுகிறது.


குளிர் நாடுகளில் லெகர் வகை பீர் மிகப்பிரபலம் காரணம்.இந்த வகை பீர் தயாரிக்க குளிர்ந்த வெப்பம் தேவைப்படும்.மேலும் தயாரிக்க ஒரு மாதத்திற்கு மேல் கூட ஆக
வாய்ப்புண்டு.

ஆனால் இந்தியா போன்ற வெப்ப
நாடுகளில் அலே வகை பீர் தான் பிரபலம்.இது தயாரிக்க வெப்பம் கூடுதலாக இருக்க வேண்டும் மற்றும் தயாரிக்க ஒருவாரமே போதுமானது, என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக பார்லி, கோதுமை, அரிசி, உருளை கிழங்கு என அந்தந்த நாடுகளில் என்ன அதிகமாக விளைகிறதோ (எப்படி நம்மூரில் பனங்கள்ளு-பனை,தென்னங்கள்ளு-தென்னை) அதைவைத்து பல வருடங்களாக பீர் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றது.அதனால் தான் மதுபானத்தின் ருசி மாறுபடுவதுண்டு.

பொதுவாக மேல் சொன்ன அனைத்து வித தானிய மற்றும் கிழங்கு வகைகளிலும் இயல்பாக ஈஸ்ட் நிறைந்திருக்கும்.

அது தன் நொதித்தல் வினையினை நிகழ்த்த காற்றற்ற (ஆக்சிஜன் இல்லாத) மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மிகவும் அவசியம்.


குறிப்பாக,
சக்கரோமைசிஸ் செர்விஸியே ஈஸ்ட் சிறப்பாக செயல்பட 21 டிகிரி செல்சியஸ் வெப்பமும்,
சக்கரோமைசிஸ் உவேரம் ஈஸ்ட் சிறப்பாக செயல்பட 5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் தேவை.

இத்தகைய கட்டுப்படுத்தப்பட்ட வசதியை தொழிற்சாலையில்
மட்டுமே சிறப்பாக செய்ய இயலும்.....

இல்லையென்றால் கட்டுப்பாடில்லா
நொதித்தல் வினை அதிகமாகி விஷமாக மாறிவிடும் வாய்ப்புண்டு.

நொதித்தல் வினையின் போது,
ஈஸ்ட் தனது நொதி துணை கொண்டு சர்க்கரையை எத்தனால் ஆகவும், கார்பன்-டை ஆக்ஸைடு ஆகவும் மாற்றுகிறது.

பின்னர் வாலை வடித்தல் முறையில் பிரித்து எடுக்க படுகிறது.


பிரித்து எடுக்கப்பட்ட இந்த எத்தனால் உள்ள நீர்மமே மதுபானமாக அதாவது பீர் ஆக விற்பனைக்கு வருகிறது (கசப்பு மற்றும் இதர சுவைக்காக சுவையூட்டி சேர்க்கப்படுவதுண்டு )

இதுவே பழங்களை புளிக்கவைத்து, இதே ஈஸ்ட் துணை கொண்டு நொதிக்க வைக்கும் பொழுது ஒயின்(wine) கிடைக்கிறது.

பார்த்துக்கொங்க.....நண்பர்களே........
நம் தமிழ்நாட்டு குடிமகன்கள் போதையில் திளைக்க இவர்கள் துணை வேண்டும். இல்லையென்றால் குடிமகன்கள் பாடு திண்டாட்டம் தான்.

ஈஸ்ட் நல்லவை தான்........ ஆனால் மனிதன் தான் தன்னுடைய சுகதுக்கங்களுக்காக இதனை நல்ல விஷயத்திற்கும்,கெட்ட விஷயத்திற்கும் பயன்படுத்தி கொள்கிறான்.

உங்களுக்கு மதுபானம் நல்லதா.....
கெட்டதா..என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.


நீங்கள் குடிப்பவராக இருந்தால் அளவோடு குடியுங்கள்.
உங்கள் உடம்பும்,குடும்பமும் உங்களை நம்பித்தான் இருக்கிறது என்பதனை மனதில் கொள்ளுங்கள்.

எது எப்படியோ.......
இன்று மதுவிற்குள் மறைந்திருக்கும் மர்மத்திற்கு விடை கிடைத்திருக்கும் என நான் நம்புகிறேன்.

இன்னொரு மர்மத்திற்கு விடை சொல்கிறேன் அடுத்த பகுதியில்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்....

No comments:

Post a Comment