Wednesday 2 November 2016

மைக்ரோ-மர்மங்கள்(ஜியோஸ்மின்)-2


பெட்ரிக்கோர் எனும் மண் வாசனைத்திரவியம்....

என்னடா இது புதுசா இருக்குனு நினைக்குறீங்களா....
பெயர் வேண்டும் என்றால் புதுசா உங்களுக்கு தோன்றலாம்.

உண்மையில் மழைக்காலங்களில்
நாம் அதிகம் நுகரும் மண் வாசனையை உருவாக்கும் திரவியம் தான் பெட்ரிக்கோர்.

இது கிரீக் வார்த்தைகளில் இருந்து வந்தவையே;
பெட்ரிக் என்றால் ஸ்டோன் என்றும், கோர் என்றால் ப்ளுயிட் என்றும், ஆங்கிலத்தில் பொருள் தரும்.

சரி இந்த மண்வாசனை திரவியத்தின் உண்மையான பெயர்:
ஜியோஸ்மின் (C12H22O)
வேதியியல் பெயர் :
4,8a-Dimethyl-decahydronaphthalen-4a-ol; Octahydro-4,8a-dimethyl-4a(2H)-naphthalenol

இந்த வேதிப்பொருளை உற்பத்தி செய்வது மனிதன் இல்லை.
அப்ப வேற யார்....?


ஆக்டினோமைசிட்ஸ் என பொதுவாக அழைக்கப்படும் ஒரு வித பூஞ்சான் போன்ற வடிவமைப்பை கொண்ட ஸ்போர்களை உண்டுபண்ணக்கூடிய பாக்டீரியா எனும் நுண்ணுயிரி.

ஸ்ட்ரெப்டோமைசிஸ் கோஎலிக்கோலர்
(Streptomyces coelicolor) எனும் சிறப்புமிக்க நுண்ணுயிரினம்
தனது வளர்சிதைமாற்றபொருளாக ஜியோஸ்மினை வெளியிடுகிறது.

எப்படி என்றால் தன்னிடம் உள்ள ஜியோஸ்மின் சிந்தேஸ்(geosmin synthase) எனும்
என்சைம் கொண்டு பார்னேசில் டைபாஸ்பேட்டை (farnesyl diphosphate)
ஜியோஸ்மின்னாக (geosmin)
மாற்றுகிறது.

மழை பொழியும் பொழுது,
மண்ணில் ஸ்போராக கிடக்கும் இந்தவகை பாக்டீரியங்கள் மீது
மழை நீர் பட்டவுடன் அண்டவெளியில் காற்றுக்குமிழி போன்று கிளம்பி
இந்த மண் வாசனை திரவம் ஜியோஸ்மின் ஆவியாக வெளியேறும்.

அதுவே நமக்கு காலம் காலமாக மண்வாசனையை தந்துகொண்டு இருக்கிறது.

ஆனால் நாமோ,மண் தான் வாசனைக்கு காரணம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.

எது எப்படியோ
மண்வாசனைக்கான
மர்ம முடிச்சு இன்று விலகிற்று.

அடுத்த பகுதியில்
இன்னொரு மர்மத்திற்கு விடை சொல்கிறேன்.

அதுவரை காத்திருங்கள்...........

No comments:

Post a Comment