Wednesday 9 November 2016

ஜியோவின் அடுத்த அவதாரம்....




ஜியோ நிறுவனம் அடுத்ததாக டிடிஎச் சேவையிலும் களம் காண இருக்கிறது.

இது ஏர்டெல் நிறுவனத்திற்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து நிறுவனங்களையும் (சன் டைரக்ட்,
டிஷ்நெட்,டாடா ஸ்கை,விடியோகான் டி2எச்) ஆட்டம் காண செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இலவச இணைப்பு அறிவிப்பு மற்றும் மாதம் 180 ரூபாய்க்கும் குறைவான மாதாந்திர திட்டங்கள்
சிலவற்றை ஜியோ நிறுவனம் உடனடியாக அதிரடியாக அறிவிக்கக்கூடும் என்கிற தகவல்
அந்த நிறுவனங்களை மேலும்
கவலை கொள்ள செய்துள்ளன.

மேலும் செட் டாப் பாக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கக்கூடியதாகவும்,இணைய வசதி ஏற்படுத்தி தரக்கூடியதாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தனை சேனல்கள் எவ்வளவு குறைந்த விலையில்  தரமான விதத்தில் தருகிறார்களோ,அதை பொறுத்தே வாடிக்கையாளர்கள் சேர்வார்கள்.அதற்காக கவர்ச்சியான திட்டங்களை இந்த நிறுவனம் அறிவிக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என்றால் மிகையாகாது.

முழுவிவரங்களை ஜியோ நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கும் என நம்பலாம்.

ஜியோ நிறுவனம் 4ஜியை போல
வேகத்தில் சொதப்பாமல்,டிடிஎச்-லாவது தரமான சேவை வழங்குதான்னு பார்ப்போம்.

எது எப்படியோ,ஏற்கனவே நம்மை சுரண்டி கொண்டிருக்கும் டிடிஎச் நிறுவனங்களிடம் இருந்து
ஜியோ நிறுவனமாவது காப்பாற்றுமா.... இல்லை ஐந்தோடு ஆறாவதாக இருக்குமா.....என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment