Wednesday 2 November 2016

மைக்ரோ-மர்மங்கள் (அறிமுகம்)-1


நாம் அனைவரும் மனிதன் மட்டுமே இந்த உலகை ஆள்கிறான் என நினைத்து கொண்டு இருக்கிறோம். அப்படியே நாம் நினைத்துக்கொண்டிருந்தால் அது நம் அறியாமை தவிர வேறு ஒன்றும் இல்லை.

நம் கண்களுக்கு புலப்படாத ஆயிரமாயிரம் அமானுஷிய விஷயங்கள் நம்மை ஆண்டு கொண்டு
இருக்கின்றன.

உடனே அமானுஷியம் என்றவுடன் பேய்,பிசாசு,சொர்க்கம், நரகம் என்று உங்கள் மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.

அதற்கும் மேல் மனுஷனுக்கு அப்பாற்பட்டு பூமி,ஆகாயம், அண்டவெளி என அனைத்திலும்
நீக்கமற எங்கும் வியாபித்திருப்பவை.



இவைகள் தான் அந்த அதிசய நுண்ணுயிர்கள்.

மனிதன் தோன்றியதற்கு முன்னதாகவே இவைகள் தோன்றியதாக வரலாற்று மற்றும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றால் இதன் தோற்றம் எப்போது இருந்திருந்திருக்கும் என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.

தம்மாத்துண்டு தானே இவை அப்படி என்னத்த பண்ணிட போகுதுனு நினைக்குறீங்களா...
நம் கண்ணுக்கு புலப்படாத இவைகள் பற்றிய ஆராய்ச்சிகள் விண்வெளியில் கூட தொடர்கிறது தெரியுமா...

இவைகள் இருப்பை வைத்தே மனிதன் வாழ்வதற்குரிய சூழல் இருக்கிறதா என நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கோங்க...

இவைகள் தான் உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கும்,வீழ்வதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...?
நம்பித்தான் ஆகவேண்டும்.
ஏன் என்றால்,அதுதானே உண்மை.

பலசாலியை பலவீனமாக்கும், அதுபோலவே பலவீனமானவரை பலசாலியாக்கும் வல்லமை இவைகளுக்கு வழங்கியிருக்கிறது இயற்கை.

நாம் நினைக்கிறோம் நுண்ணுயிர்கள் என்றால் கிருமிகள்; அவை நம்மை துன்புறுத்தும்,உயிர் போக்கும் நச்சுக்களை வெளிப்படுத்தும் அவ்வளவுதான் என்று....

இவை தான் உங்களுக்கு தெரியும் என்றால், அது பற்றி உங்களது அறிவுக்கு எட்டியவை அவ்வளவே....

உங்கள் அறிவிற்கு அப்பாற்பட்டு அவைகள் மனிதனுக்கும், மண்ணுலகிற்கும் செய்யும் மறைமுக உதவிகள் ஆயிரமாயிரம்......

அத்தகைய மறைந்து கிடக்கும் மர்மங்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் முயற்சியே இந்த மைக்ரோ மர்மங்கள்......

உங்களை ஆச்சர்ய படவைக்கும்,அதிசயிக்கும்
மர்மங்கள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு பகுதி வாயிலாக விலகும்.

அதுவரை
கொஞ்சம் பொறுமையாக
காத்திருங்கள்.....................

No comments:

Post a Comment