Saturday 5 November 2016

மைக்ரோ-மர்மங்கள்(தயிர்)-4


தயிர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.பால் கூட கவுச்சி வாடை அடிக்கும் என அதனை நேரடியாக காய்ச்சி குடிக்க தவிர்ப்போர் பலர் உண்டு.

ஆனால் அதுவே தயிர் என்றால் போதும்,பாலை வெறுப்பவர் கூட விரும்பி உணவோடு அல்லது வேறு வகையிலான குளிர்பானங்களோடு சேர்த்து உண்பதுண்டு.காரணம் அதனுடைய சுவையே...

சரி அத்தகைய தயிருக்கு சுவை தருபவர் யார் என்று தெரியுமா....?


வேற யார்....
நம் கண்ணுக்கு தெரியாமல் நல்லது செய்யும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் தான்.....

அப்படி என்ன பாலில் வித்தை செய்கிறது என்பதை பார்ப்போம் வாங்க.....

பொதுவாக நாம் உண்ணக்கூடிய பால்
சக்கரை,புரதம் மற்றும் கால்சியம்
சத்து நிறைந்தது.

இந்த பாலில் இயற்கையாகவே
நம் உடலுக்கு நன்மை செய்யும் லாக்டிக் ஆசிட் பாக்டீரியாக்கள் இருக்கும்.


அவையாவன:
லாக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்
(Lactobacillus acidophilus)
லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ்
(Lactobacillus lactis)
லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ் கிரேமோரிஸ் (Lactobacillus lactis cremoris)
 
குறிப்பாக பாலில் இருக்கக்கூடிய லாக்டோஸ் (குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸ் இணைந்து உருவானது )
என்று சொல்லக்கூடிய இரட்டைச்சக்கரையை தன்னுடைய லாக்டேஸ் நொதி கொண்டு முதலில் ஆல்கஹால் ஆக மாற்றும்.
பின்னர் அந்த ஆல்கஹாலினை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது.

இந்த லாக்டிக் அமிலமே தயிர் உருவாக காரணமாகிறது.இவையனைத்தும் அறை வெப்பநிலையில் இயல்பாக நடைபெற வேண்டும்.
இல்லையேல்,இந்த பாக்டீரியாவினால் இந்த நொதித்தல் நிகழ்வினை பாலில் ஏற்படுத்துவது மிகவும் கடினம்.

பொதுவாக உறைமோர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.......இது ஏற்கனவே நாம் பயன்படுத்திய மோரில் மிஞ்சியது.இதில் இயல்பாகவே மேலே சொன்ன லாக்டிக் ஆசிட் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும்.


ஆகவே,புதிய பாலை சுட வைத்து
பின் 40 டிகிரி இல் இருந்து 30 டிகிரி அளவில் குளிர்வித்து,இந்த உறைமோர் சிறிது விட்டால் போதும்.

நான்கு மணி நேரத்திற்குள் புளித்து சுவையான தயிர் உருவாகி விடும். உடனே பயன்படுத்தி விட்டு, குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும்.

இல்லையேல், தொடர்ச்சியாக லாக்டிக் அமிலம் அதிகம் உற்பத்தியாகி அளவுக்கு அதிகமாக புளித்து பாலையே கெடுத்து விடும்.ஒரு சிலர் அதையே பாலாடைக்கட்டியாக்கி உங்களிடமே விற்றுவிடுவார்கள்..பார்த்துக்கொங்க..

ஆக அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது இதற்கு சாலப்பொருந்தும்.

நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் பால் தயிர் என்ற அமிர்தமாக மாற வேண்டுமா அல்லது வேண்டாமா என்று..... ?


தயிர் என்ற அமிர்தத்தை
பருக தயாராகிட்டீங்களா.......

தயிருக்குள் மறைந்திருந்த
மர்மத்திற்கு
இன்று விடை கிடைச்சாச்சு......

அடுத்த பகுதியில் தமிழகமே மயங்கி கிடக்கும் குளிர்பானத்திற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை உடைக்கிறேன்.

அதுவரை கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள்......

No comments:

Post a Comment