Monday 19 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-5



பிரபல உணவுவிடுதிக்கு ஒரு நாள் ஒருவர் சாப்பிட செல்கிறார். அப்போது மிகவும் சாதாரண உடை அணிந்திருந்தார்.
அவர் சர்வரை அழைத்தாலும் அவர் இவரது தோற்றத்தைப்பார்த்து ஒழுங்கான முறையில் உணவினை வழங்கி உபசரிக்கவில்லை. ஒருவழியாக அசௌகரியத்துடன் சாப்பிட்டு முடித்தார்.

பின்னர் சர்வர் பணம் வேண்டி பில்லை நீட்டினார். அவரோ பில்லுக்கு உரிய தொகையை காட்டிலும் கூடுதலாக நூறு ரூபாய் கொடுத்தார் .
அவனுக்கோ ஆச்சர்யம் !! ஒருவேளை பணக்காரராக இருப்பாரோ ? என நினைத்துவிட்டு தன் தவறுக்கு மனதுக்குள்ளேயே வருந்தினான்,நன்றாக கவனித்து இருந்தால் இன்னும் கூடுதலாக பணம் கொடுத்திருப்பாரென்று.

சில நாட்களுக்கு பிறகு அதே உணவுவிடுதிக்கு அவர் சாப்பிட சென்றார். அதே சர்வர் ஆனால் போனமுறையை விட பிரமாதமாக உணவினை உபசரித்தார். சாப்பிட்டு முடித்தபின் டிப்ஸாக ஐந்து ரூபாய் மட்டுமே கொடுத்தார்.

அப்போது அந்த சர்வரிடம் ,
இது நீ அன்று எனக்கு உபசரித்ததற்க்கு.அன்று  கொடுத்தது இன்று நீ செய்த உபசரிப்பிற்கு என்றார் பாருங்கள்.
உடனே சர்வர் தன் தவறிற்கு மன்னிப்பு கேட்டான்.ஆனால் அவர் பொருட்படுத்தவேயில்லை.

ஒருவர் தோற்றத்தை வைத்து எடைபோடுவது தவறு தானே நண்பர்களே.....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment