Wednesday 28 September 2016

மனமயக்கும் மஸ்கோத் அல்வா...


மஸ்கோத் அல்வா என்றதும் நம் நினைவுக்கு வருவது முதலூர்.
சரி முதலூர் எங்கிருக்கிறது ?

நம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிற மிக சிறிய ஊர்.

இந்த ஊர் தான் மஸ்கோத் அல்வாவுக்கு பெயர்போனது, காரணம் அதன் ருசி மற்றும் தரம்.

அத்தகைய ருசி மிகுந்த அல்வாவினை வீட்டில் செய்து பார்க்கலாமா...

தேவையான பொருள்கள்:
ஊறவைத்த உடைத்த சம்பா கோதுமை
தேங்காய் துருவியது
சீனி
முந்திரி
நெய்

மேற்கூறிய பொருள்கள் அனைத்தும் உங்கள் தேவைக்கேற்ப மறக்காதீங்க...

சரி வாங்க எப்புடி செய்யலாம்னு பார்க்கலாம்...

முதலில் ஒருநாள் இரவு ஊறவைத்த சம்பா கோதுமையை ஆட்டி கிடைக்கும் பாலை வடிகட்டி எடுத்து வச்சுக்குங்க..

அப்புறம் துருவிய தேங்காயினை சுடுநீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிற்பாடு மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ அரைத்து பின் வடிகட்டி பாலை எடுத்துக்குங்க..

அவ்வளவு தான் முக்கியமான வேலை முடிச்சாச்சு...

இனி அடுப்பை பத்தவைத்து முதலில் கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி முதலான அழகுபடுத்தும் பொருள்களை சிவப்பு செந்நிறம் வரும் வரை மிதமானா தீயில் வறுத்து வைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்...

அப்புறம் கடாயில் தேங்காய்ப்பால், கோதுமைப்பால், சீனி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக குறிப்பிட்ட இடைவெளியில் சேர்த்துக்கொண்டே ஒருபக்கம் விடாது கரண்டி கொண்டு கிண்டி கொண்டே இருக்கணும்...

ஒருபோதும் கிண்டுவதை நிறுத்தக்கூடாது.
கிண்ட கிண்ட கெட்டிபதம் அடையும் தருவாயில் தேங்காய் எண்ணெய் வாசனையுடன் மேலெழும்பி வரும் அதுதான் இறுதி நிலை.

இவை அனைத்தும் குறைந்த தீயில் அடுப்பை வைத்தே செய்யுங்கள். இல்லையேல் அடிபிடித்துவிடும் மறக்காதீங்க...

கமகம என தேங்காய் எண்ணெய் வாசம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடுங்க.

பின்னர் வறுத்த வைத்த முந்திரி முதலான பொருள்களை தூவிடுங்க,முடிந்தது வேலை.

சுவையான மனமயக்கும் மஸ்கோத் அல்வா உங்கள் வீட்டிலேயே தயார்.


சுவைக்க தயாரா...


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

2 comments:

  1. மகிழ்ச்சி... கண்டிப்பாக என் பதிவுகளை இணைக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete