Friday 16 September 2016

உளவியல் தந்தையின் உன்னத வரிகள....

பகுப்பாய்வு உளவியலின் தந்தை

கார்ல் ஜங் இன் பொன்மொழிகள்....

நம்மால் எதையும்
மாற்ற முடியாது
அதை நாம்
ஏற்றுக்கொள்ளும் வரை....

வாழ்க்கையில்
அர்த்தமற்ற
பெரிய விஷயங்களை விட
அர்த்தமுள்ள
சிறிய விஷயங்களே
மதிப்பு மிக்கது.....

மனிதனுக்கு கஷ்டங்கள் தேவைப்படுகிறது
அதுவே
அவன் ஆரோக்கியத்திற்கு அவசியமாகிறது....

வெளிப்புறத்தை காண்பவர்களே
கனவு காணுகிறார்கள்.
உள்மனதை காண்பவர்கள் எப்பொழுதும்
விழிப்புடனே இருக்கிறார்கள்....

மனிதனுக்கு
வலி இல்லாமல்
உணர்வுநிலை
ஏதும் வருவது இல்லை...

அன்பு இருக்கும் இடத்தில் அதிகாரத்திற்கு இடமில்லை.
அதிகாரம் இருக்கும் இடத்தில்
அன்பிற்கு வேலை இல்லை....

மேலே குறிப்பிட்டுள்ள பொன்மொழிகள்
உங்கள் வாழ்க்கைக்கு வலுசேர்க்கும் என்கிற நம்பிக்கையோடு..💃


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


No comments:

Post a Comment