Tuesday 20 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-6


ஒரு நாள் தீடீர் என புயல் மழை அடிக்க பல ஆண்டாக உயர்ந்து வளர்ந்த மரம் அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பெயர்ந்து கீழே விழுந்துவிட்டது.

மரத்தின் அருகில் இருந்த நாணலோ ஒன்றும் நடக்காதது போல நின்றுகொண்டு இருந்தது. அப்போது நாணலை பார்த்து என் நிலையை பார்த்தாயா?

இத்தனை காலம் இங்குள்ள அனைவருக்கும் நிழல் கொடுத்தேன்,கனி கொடுத்தேன், ஒதுங்க இடம் கூட கொடுத்தேன்.
இன்று வேர் அறுந்து வீழ்ந்து கிடக்கிறேன்,என வேதனையுடன் கூறியது.

எல்லாம் சரிதான். ஆனாலும் நீ தவறிழைத்து விட்டாயே ! என்றது நாணல்.
அப்படி நான் என்ன பெரிய தவறு
இழைத்துவிட்டேன்? என கோபத்துடன் கேட்டது வீழ்ந்த மரம்.

நீயே சொல்,
உன்னைவிட பலசாலியான புயல்மழையை எதிர்த்து நிற்கலாமா ?
எதிர்த்து நின்றாய்,அதனால் வீழ்ந்தாய்.

என்னைப்பார் வளைந்து வழிவிட்டேன் எனக்கு எந்த துயரமும் இல்லை.

நம் பலம்
நமக்கு தெரியும் தானே
நண்பர்களே....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment