Sunday 11 September 2016

சியோமி என் சீனத்து நண்பன்....


சியோமி 
என் சீனத்து நண்பன்....

இரெண்டு வருடம் 
என் கூட பயணிக்கும் இணைபிரியா தோழன்....

என்னை 
உங்களோடு இணைத்த மந்திரகாரன்....

தொடுதிரை 
தொட்டால் போதும் வேகமெடுப்பான்....

பெரும்பாலும் 
என் கைவிரல்களுக்குள் 
சிக்கி கதறுவான்....
ஆனாலும் 
அவனாக அணைந்ததில்லை....

என் கைவிரலின் 
கட்டளைக்காக காத்திருப்பான்....

சில நேரங்களில் 
சுட்டெரிக்கும் சூரியனாய் ஜொலிப்பான்....

பல நேரங்களில் 
குளிர்விக்கும் சந்திரனாய் 
சிலிர்ப்பான்....

கொஞ்ச நேரம் 
விளையாடினால் போதும் சூடாகிவிடுவான்....
அணைத்து வைத்தால் 
அடங்கிடுவான்....

ஆகாய விமான முத்திரையை அழுத்தினால் 
பேட்டரி ஆயுள் 
கொஞ்சம் அதிகம் தான்....

பாட்டு கேட்க 
பயனில்லாதவன்....
படம் பார்க்க 
பயணுள்ளவன்....

எடை அதிகம் தான் 
ஆனாலும் 
அனைவர் கைகளுக்கும் 
எளிதில் அகப்படாதவன்.... ஆன்லைனில் 
அரிதாக கிடைப்பவன்....

என் 
மூன்றாவது முயற்ச்சியில் 
கிடைத்த முத்து இவன்....

குறைவான விலையில் 
அதிக தரத்துடன் குஷிப்படுத்துபவன்....

முயற்சித்து பாருங்கள் உங்களையும் 
குஷிப்படுத்துவான்.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment