Sunday 18 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-4


பேராசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு
கவலை மற்றும் பிரச்னைகள் பற்றி் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது நாற்காலியில் பெரியதும் சிறியதுமாக வெவ்வேறு கற்களை
வைத்திருந்தார்.அவை எளிதில் கையால் தூக்கக்கூடியவே.

சிறிது நேரத்தில் மாணவர்களை பார்த்து இந்த கற்களை உங்களால் தூக்க இயலுமா ? என்றார்.
உடனே மாணவர்கள் உறசாகமாய் தலையசைத்து ஆளுக்கொரு கல்லை எடுத்தார்கள்.எடுத்த கல்லை கையில் வைத்து நீட்டி பிடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
அவர்களும் சந்தோசமாக எளிதாகத்தான் இருக்கிறது,அவ்வளவு ஒன்றும் கனமாக இல்லையே ! என்றனர்.

அப்படியா? என்று கேட்டுவிட்டு பேராசிரியர் வேறு வேலையில் மூழ்கிவிட்டார்.

நேரம் ஆக ஆக மாணவர்கள் கை வலிக்கிறது,கல்லை பிடித்து கொண்டு நிற்கமுடியவில்லை என முனங்க ஆரம்பித்தார்கள்.

அப்போது பேராசிரியர் அங்கு வந்து அவர்களை பார்த்து,
வாழ்க்கையில் கவலைகளும் பிரச்சனைகளும் இப்படித்தான்.. சிறிதாக இருந்தாலும் மனதிலே சுமந்து கொண்டிருந்தால் பாரமாகத்தான் இருக்கும். ஆகவே அந்தந்த நேரத்தில் சமாளித்து விடுங்கள்.மாறாக சுமந்து கொண்டே திரிந்தால் உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களை விட்டு காணாமல் போய்விடும்.

பிரச்சனை சிறிது தானே என்று இனி உங்கள் மனதில் தேக்கி வைக்கமாட்டீர்கள் தானே....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment