Monday 12 September 2016

தமிழனாய் பிறந்தது தவறா...

நாங்கள் தமிழனாய்
பிறந்தது
எங்கள் தவறா.....

உரிமைக்கு
குரல் உயர்த்தினால்
எங்கள் உயிருக்கு
உலை வைக்கிறாய்....

வாடிய பயிரை
கண்டபோது வாடியவன்
என் முப்பாட்டான்.....

அவன் வழியில்
வாடுகிற பயிர் உயிர் வாழ
நீர் கேட்டால்
சிறுநீரைக் குடி என்கிறாய்....

காவிரி
எனக்கு மட்டுமே சொந்தம்
என்று
தண்ணீர் தர மறுக்கிறாய்....

நாங்களும்
எனக்கு மட்டுமே சொந்தம்
என்று
மின்சாரம் தர மறுத்தால்...
அரிசி தர மறுத்தால்....
மணல் தர மறுத்தால்....

மானுடம் எங்கே வாழும்
மடையர்களே....

நீங்கள் நொறுக்கியது
எங்கள் பொருள்களையல்ல
இதயத்தை....

வீழ்வோம் என நினைக்காதே
வீறு கொண்டு எழுவோம்....

அடிப்பது
உன் குணம் என்றால்....

அரவணைப்பது
எங்கள் குணம்....

அதற்காக
அடிக்க தெரியாது
என நினைத்து விடாதே....

இது
பாரதியை பார்த்த பூமி..
வாஞ்சிநாதன் வாழ்ந்த பூமி..

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment