Tuesday 27 September 2016

இவரைத் தெரியுமா...?-2


பெரிய தலையுடன் பிறந்ததால் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார் என மருத்துவர்களால் கைவிடப்பட்ட குழந்தை...

சிறுவயதில் ஸ்கேர்லெட் காய்ச்சலால் காது கேட்கும் திறனை இழந்த சிறுவன்...

வறுமையின் காரணமாக ரயில் நிலையத்தில் செய்தித்தாள் விற்பனை மூலம் தன் தாயின் கஷ்டத்தை இளம்பிராயத்தில் பகிர்ந்து கொண்ட பள்ளி மாணவன்...

இந்த மாணவன் படிப்பில் தேறமாட்டான் என ஆசிரியர்களால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு, தன் தாயின் வழிகாட்டுதலால் படிப்பறிவினை பெற்ற அறிவாளி...

ஆயிரத்திற்கு மேல் தான் கண்டுபிடித்த அனைத்தையும் மனித குலத்துக்கு அர்ப்பணித்த அதிசய பிறவி...

முயற்சிகள் ஆயிரம் தடவை தோற்றாலும் முயற்ச்சிக்க ஒருபோதும் தவறக்கூடாது என்று நம்பிக்கை விதைத்த மாமனிதன்...

உலகிற்க்கு வெளிச்சம் கொடுக்க ஈராயிரம் தோல்விகள் சந்தித்தும் முயன்று ஜெயித்த மூத்தஞானி..

அவர் இறந்தாலும் அவர் கண்டுபிடிப்புகளால் மனிதகுலம் மறையும் வரை வாழ்ந்துகொண்டே இருப்பார்...

யார் என்று தெரியலையா ? நண்பர்களே..

இவர் தான் சினிமா, மின்சாரம் என மனிதன் அன்றாட வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருக்கும் பல ஆயிரம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஆசிரியர்களால்
புறக்கணிக்கப்பட்டு
அன்புத்தாய் நான்ஸியால் அறிவூட்டப்பட்ட அதிசய விஞ்ஞானி

தாமஸ் ஆல்வா எடிசன்...

நான்சி என்கிற தாய்
இல்லை என்றால்
எடிசன் இல்லை..

எடிசன் இல்லை என்றால்  
இந்த  உலகிற்க்கு
வெளிச்சம் இல்லை...

இவரை மறக்கலாமா....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment