Sunday 25 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-10


ஒருமுறை ஸ்பாஸ்க்கிக்கும் பிஷெருக்கும் இடையே நடந்த உலக சதுரங்க போட்டியில் கடும் போராட்டத்திற்கு பிறகு பிஷெர் வென்று சாம்பியன் ஆனார்.

அப்பொழுது எப்படி வென்றீர்கள்? என கேட்டதற்கு, பயிற்சி தான் என சுருக்குமாக சொல்லி முடித்தார்.

உடனே எவ்வளவு நேரம் செஸ்ஸில் பயிற்சி எடுப்பீர்கள் ? என கேட்டவுடன், நான் நீச்சல் பயிற்சி எடுப்பேன் என்றார்.

கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே பிஷெரிடம் நீச்சல் பயிற்சிக்கும் செஸுக்கும் என்ன சம்பந்தம்? என கேட்டனர்.

செஸ் என்பது மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டு. மூளை எப்பொழுதும் புத்துணர்வுடன் இருக்க பிராணவாயு அவசியம்.பிராணவாயு நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நுரையீரல் சிறப்பாக செயல்படவேண்டும்.

ஆகவே தான் நுரையீரல் சிறப்பாக செயல்பட நீச்சல் பயிற்சியினை கடுமையாக மேற்கொண்டேன்.
அதன் வாயிலாக என் எனெர்ஜியை மேம்படுத்தி செஸ்ஸில் வெற்றிபெற்றேன் என்றார் பிஷெர்.

மாற்று சிந்திப்பவன்
ஒருபோதும்
தோற்பதில்லை என்பதற்கு மிகச்சரியான உதாரணம்
இந்த சம்பவம்.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment