Saturday 24 September 2016

இவரைத் தெரியுமா...? -1


நம்மூரில் மரம் நடுவதாக சொல்லி நடாமலேயே போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசியல்வாதியை பார்த்திருக்கிறோம்.
ஆனால் இவர் உண்மையிலேயே மூன்று கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு தன் நாட்டுக்கும் மட்டும் அல்ல; இந்த உலகுக்கே முன்னுதாரணமாய் திகழும் பெண்மணி...

கறுப்பர் இனத்தில் சாதாரண குடும்பத்தில் உதித்த சூரியபுத்ரி..

தன்னுடைய நாட்டு காடுகள் அழிக்கப்பட்டு செழிப்பை இழந்துவருவதை தடுக்க
"க்ரீன் பெல்ட் மூவ்மெண்ட்" என்கிற இயக்கத்தை முன்னெடுத்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்க புறப்பட்ட சூறாவளி...

முதல் முயற்சியிலே மற்றவர்க்கு முன்னுதாரணமாய் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்ட அசராத பெண்மணி...

தன்னுடைய நாட்டு காடுகளை அழித்து தொழிற்சாலை அமைக்க வந்த வெளிநாட்டு கம்பெனியை மக்களை திரட்டி விரட்டி அடித்த வீரமங்கை...

தேர்தலில் மக்கள் ஆதரவுடன் போட்டியிட்டு வென்று தான் விரும்பிய சுற்றுப்புற சூழல் துறைக்கு அமைச்சர் ஆனவர்...

ஒருவருக்கு பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால் ஒரு ஏக்கர் நிலம் முழுக்க மரம் நட வேண்டும் என சட்டம் கொண்டுவர திட்டமிட்டு முயற்சி செய்பவர்...

"மரங்கள் வைக்கும்போது தான் நம்பிக்கை விதைகளை ஊன்றுகிறோம்.இதுவே நம் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டு செல்லும் சொத்து" என சொன்னவர்..

யாரும் செய்யத்துணியாத அடிமைப்பட்டு கிடந்த கறுப்பினத்தில் இருந்து வந்து உலகை திரும்பி பார்க்க செய்த இந்த பெண்மணி அமைதிக்கான நொபேல் பரிசினை பெற்றவர்..

யார் என தெரியலையா ?

இவர்தான் கென்யா தேசத்தில் உதித்த ஒளிக்கீற்று
வாங்கரி மாத்தாய்....

இவரை மறக்கலாமா....
நினைவில் கொள்வோம்...
நாமும் அவரது பணியை நம் நாட்டிலும் தொடர்வோம்.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment