Friday 30 September 2016

தியாகம் பெரிது....


தன் குழந்தை வரவுக்காக
பத்து மாதம் தவம் கிடக்கும்
தாயின் தியாகம் பெரிது....

நாட்டினை பாதுகாக்க
மழை வெயில் பாராது உழைக்கும் சிப்பாய்களின் தியாகம் பெரிது...

தன் தேச விடுதலைக்காக தன்னுயிர் தந்த தலைவன் மகாத்மா காந்தியின் தியாகம் பெரிது....

மூளைச்சாவடைந்த
தங்கள் பிள்ளையின் உடலுறுப்புகளை தானம் செய்து மற்றவர்க்கு உயிர்கொடுக்கும் பெற்றோர்களின் தியாகம் பெரிது...

பசுவுக்கு நீதி வழங்க
தன் மகனையே
தேரோட்டி கொல்ல உத்தரவிட்டு நீதியை நிலைநாட்டிய மனுநீதிசோழனின் தியாகம் பெரிது....

தன் சொத்தை விற்று
பெரியார் அணை எழுப்ப உதவிய வெள்ளைமனசுக்காரன்
பென்னி குயிக்கின் தியாகம் பெரிது....

தன் தேசத்திற்காக
ஆசைகளை துறந்த
அப்துல் கலாம் போன்ற
ஆயிரமாயிரம் பெரியவர்களின்
தியாகம் பெரிது....

எங்கோ பிறந்து
ஏழைத்தொழுநோயாளிகளின்
கண்ணீர் துடைக்க இந்தியா வந்த அன்னை தெரசாவின் தியாகம் பெரிது...

மக்களுக்காக
தங்கள் உடம்பை வருத்தி உழைக்கும் வர்க்கத்தினரின் தியாகம் பெரிது....

மெழுகைப்போல்
தங்களை உருக்கி
மற்றவருக்கு வெளிச்சம் தரும்
மனிதர்கள் ஏராளம்....ஏராளம்....

வாழ்வில் மறக்காது
மனதில் கொள்வோம்
அவர்களின் தியாகம் பெரிது என்று...


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment