Sunday 25 September 2016

வந்தாச்சு அடுத்த தேர்தல் திருவிழா....


தமிழக உள்ளாட்சி தேர்தல்களுக்கான தேர்தல் தேதிகளை மாநிலத்தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதன்படி 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர-21 ல்  முடிவுகள் அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.ஆகையால் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக்காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் மட்டும்
12 மாநகராட்சிகள்,
124 நகராட்சிகள்,
31 மாவட்ட பஞ்சாயத்துகள்,
385 பஞ்சாயத்து யூனியன்கள்,
528 பேரூராட்சிகள்,
12,524 கிராம பஞ்சாயத்துகள், உள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன.

இந்த முறை வார்டு கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடக்கிறது.

மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மொத்தம் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

மறக்காமல் வாக்களியுங்கள்..

பணத்தை பெற்று கொண்டு உங்கள் ஓட்டை விற்காதீர்கள்...

மீண்டும் ஏமாறாதீர்...
நம்மில்
நல்லவரை தேர்ந்தெடுப்போம்...
நம் பகுதி பிரச்சினைகளை தீர்ப்போம்.




No comments:

Post a Comment