Tuesday 27 September 2016

எச்சில் ஊறவைக்கும் கருப்பு தொதல் அல்வா..


என்னடா இது புதுசால்ல இருக்குனு நினைக்குறீங்களா ?

சரி வாங்க...தெரிஞ்சுக்குலாம்...

இந்த அல்வா பற்றி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பக்கம் போனீங்கனா தெரிஞ்சுக்குலாம். அங்கு இதற்கு பெயர் தொதல்..

குறிப்பா இந்த பகுதிக்கு இலங்கையோட மிக நெருங்கிய வணிக தொடர்பு இருந்ததாகவும், அதன் வாயிலாக அங்கு இருந்து இந்த இனிப்பு வகையானது இங்கு வந்ததாகவும் சொல்றாங்க.

எது எப்படியோ நமக்கு நல்ல ஒரு புதுவிதமான இனிப்பு கிடைச்சிருக்கு.

இதையே இந்த தீபாவளிக்கு செஞ்சு உங்க வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க

தேவையான பொருள்கள் :
தேங்காய்ப்பால்
ஊறவைத்த ஜவ்வரிசி
சீனி
கருப்பட்டி வெல்லம்
ஊறவைத்த மைதா பால்
முந்திரி
தேங்காய் எண்ணெய்
ஏலக்காய் பொடி

மேலே சொன்ன பொருள்கள் அனைத்தும் உங்கள் தேவைக்கு ஏற்ப மறந்துடாதீங்க....

சரி வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்...

விறகு அடுப்பு இருந்தால் நல்லது. முதலில் கடாயில் தேங்காய்ப்பாலை ஊத்துங்க. அப்புறம் ஊறவைத்த ஜவ்வரிசியை அதில் சேர்த்து கரண்டியை வைத்து விடாமல் கிண்டிக்கொண்டே இருக்கணும்.

அதற்கப்புறம் சீனியை சேருங்க, கிண்டுங்க.பிற்பாடு சுத்தப்படுத்திய கருப்பட்டி வெல்ல கரைசலை சேர்த்துடுங்க.
இதுதான் இந்த தொதல் அல்வாவிற்கு அடிப்படை நிறமாக கறுப்பினை தருகிறது.

இதெற்கு அடுத்ததாக ஒருநாள் இரவு ஊறவைத்த மைதா பாலினை சேருங்க, அவ்வளவு தான்.

நான் சொன்ன ஒவ்வொரு பொருளும் ஒருபக்கம் சேர்க்க சேர்க்க இன்னொரு பக்கம் கடாய் அடிபிடிக்காதவாறு கிண்டிக்கொண்டே இருக்கணும்.

மறந்துடாதீங்க இது முழுமையான பக்குவத்தை அடைய இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகும். ஆகவே பொறுமை மிகவும் அவசியம்.

இறுதியாக பதத்தை அடையும் தருவாயில் ஏலக்காய் பொடி முந்திரி சேர்க்கவும்.

அடுத்ததாக தேங்காய் எண்ணெய் சேர்த்து கிண்டி இறக்கிவிட வேண்டியதுதான்.

சுவையான தொதல் அல்வா இல்லை கருப்பு அல்வா தயார்...



சுவைக்க தயாரா...


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment