Saturday 24 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-8


மறைந்தும் வாழும் மனிதன் ஆல்ப்ரெட் நோபேல் ....

ஒருநாள் காலையில் செய்தித்தாளை பார்த்ததும் நோபேலுக்கு அதிர்ச்சி. அதற்குக்காரணம் அந்த செய்தியில் டைனமைட் கண்டுபிடித்த மரணவியாபாரி மறைந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததுதான்.

இந்த செய்தியில் குறிப்பிட்டு இருந்த மரணவியாபாரி என்கிற வார்த்தை அவர் மனதில் ஆறாத வடுவாக மாறியது.

தான் வெடிமருந்து கண்டுபிடித்ததால் தானே இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே வெடிமருந்து கண்டுபிடித்ததனால் கிடைத்த மொத்த பணத்தையும் பொதுநலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்கிற நினைப்பில் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

அந்த அமைப்பு அமைதிக்கு மட்டும் அல்லாது பல துறையில் சிறப்பாக செயல்படுவோருக்கு இன்றும் அவர் நினைவாக அவரது பெயரிலேயே
வழங்கப்பட்டு வருகிற   உலகப்புகழ்பெற்ற நோபேல் பரிசு.

இன்று யாராவது மரணவியாபாரி என்பார்களா நொபேலை....

மரணித்தும் வாழ்கிறார் மாமனிதாய்....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment