Wednesday 21 September 2016

காகத்திடமும் கற்கலாம்......



அண்டவெளியை
அன்றாடம் 
சுத்தம் செய்யும் 
ஆகாயசூரன்...

தன் எச்சத்தின் மூலம் 
விதை தூவி 
தரணியை தழைக்கச்செய்த பசுமைப்புரட்சியாளன்...

அசுத்தத்தை 
அகந்தையில்லாமல் அப்புறப்படுத்தும் அஞ்சாநெஞ்சன்....
நீயில்லையேல்
நாறிப்போய்விடும் நம்நாடு....

கொஞ்சம் நீருள்ள பானையில் 
கல் நிரப்பி 
அதன் மூலம் நீரை மேலெழுப்பி 
தன் தாகம் தணித்து 
அனைவருக்கும் 
அறிவு புகட்டிய அறிவாளி...

மின்சாரக்கம்பியில் 
சம்சாரத்துடன் கூடுகட்டி 
பயமில்லை எனக்கென்று  
பறைசாற்றிய பங்காளி...

மரணித்தால் கூட 
கூக்குரலிட்டு கூட்டத்தைக்கூட்டி 
ஒப்பாரி வைத்து 
ஒற்றுமையை 
உலகிற்கு உரைத்தவன்...

தான் தனியாக கத்தினால் 
நல்லது நடக்கும்..
கூட்டமாக கத்தினால் 
கெட்டது நடக்கும் என 
மக்கள் நம்பிக்கை பெற்ற  நாயகன்...

உன்னை மறக்கலாமா 
உயிர் உள்ளவரை... 
ஆகவேதான் 

சனிதோறும் சாப்பாடு வைக்கிறார்களோ! உனக்கு.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

2 comments:

  1. மரணித்தால் கூட
    கூக்குரலிட்டு கூட்டத்தைக்கூட்டி
    ஒப்பாரி வைத்து
    ஒற்றுமையை
    உலகிற்கு உரைத்தவன்...

    தான் தனியாக கத்தினால்
    நல்லது நடக்கும்..
    கூட்டமாக கத்தினால்
    கெட்டது நடக்கும் என
    மக்கள் நம்பிக்கை பெற்ற நாயகன்...

    இரசித்தேன்..

    ReplyDelete