Monday 19 September 2016

நினைத்து பார்க்கிறேன்


அம்மாவிடம்
அழுது அடம்பிடித்து
நாலணா வாங்கிக்கொண்டு
நாடார் கடைக்கு
மூச்சிரைக்க ஓடுவேன்
மிட்டாயி வாங்க....

ஒருவழியாக
பத்து பைசாவுக்கு கல்கோனா.. இன்னொரு பத்து பைசாவுக்கு தேன் மிட்டாயி..
கடைசியா அஞ்சு பைசாவுக்கு
சூட மிட்டாயினு..
கால் ரூபாயும் காணாம போயிரும்...



தேன் மிட்டாய் தேவாமிர்தமாய் வாய்முழுக்க இனிக்கும்.
பல் லேசாக பட்டால்
கரைந்து காணாமல் போய்விடும்...


கல்கோனா கல்லை போன்றது.
வாயில் வைத்தால் போதும்
உமிழ்நீரும் ஊற்றெடுக்கும்
பல்லுக்கு பகையாளி...


சூடமிட்டாய் சுல்லென எரியும்
ஆனாலும்
சிறிது நேரத்தில்
கற்பூரமாய் கரைந்து போகும் உமிழ்நீரில்....

அன்றைய  தேன் மிட்டாய்
இன்று தேன்குழல்..
அன்றைய கல்கோனா
இன்று கம்மர்கட்..
அன்றைய சூடமிட்டாய்
இன்று மெந்தால்...

பேரும் ருசியும்
காணாமல் போனது இன்று..
ஆதலால்
நினைத்து பார்க்கிறேன்.......

உங்களுக்கும் அனுபவம் இருந்தால் கருத்தினை பகிரலாமே....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

2 comments:

  1. bro most of my childhood days were spent on seeing others enjoyment with KALKONA AND SOODA MITTOI good wishes

    ReplyDelete
  2. எண்ணிப் பார்க்கும் போதே நாவில் தித்திக்கிறது.

    ReplyDelete