Sunday 25 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-9


ஒருவன் தனக்காக உழைத்து வந்த மாடு முதிர்ச்சியின் காரணமாக ஒழுங்காக வேலை செய்ய மறுத்தது.
இதனால் மனம் வெதும்பி ஒருவழியாக அந்த மாட்டை விற்க முடிவு செய்து சந்தைக்கு ஒட்டி கொண்டு போனான்.

அங்கு மாடு நீண்ட நாள் எனக்காக உழைத்தது. இப்போது அதற்கு வயதாகி விட்டதால் அது வேலை செய்ய மாட்டிக்கிது ஆகவே, அதனை விற்கிறேன் யாராவது உங்களுக்கு தேவை என்றால் வாங்கி கொள்ளுங்கள் என உண்மையை சொல்லி கூவினான்.

யாரும் வாங்குவதாக இல்லை.
இது அவனை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.அப்பொழுது அவன் நண்பன் அங்கு வந்தான்.என்ன பிரச்சினை என அவனிடம் கேட்க, அவனும் நடந்ததை சொல்லி வருந்தினான்.

உடனே அவன் நண்பன்,
உனக்கு உன் மாடு விற்கணும் அவ்வளவு தானே !
நான் உனக்கு விற்று தருகிறேன், என்று சொல்லிவிட்டு மாட்டை பற்றி புகழ்ந்து சொல்ல முடிவு செய்தான்.

அதாவது இந்த மாடு ராசியானது, இந்த மாடு உங்கள் வீட்டில் இருந்தால் போதும் செல்வம் வந்து சேரும்,அவருக்கு சிறு பணப்பிரச்சினை, ஆகவே விற்க முடிவு செய்துள்ளார் என கூவினான்.

அவ்வளவுதான் ஆளாளுக்கு பேரம் பேச ஆரம்பிக்க ஒருவழியாக மாட்டை நல்ல விலைக்கு ஒருவருக்கு விற்று அந்த பணத்தை தன் நண்பரான மாட்டின் உரிமையாளரிடம் கொடுத்தான்.

அவனுக்கு தன் வயதான மாடு அதிக விலைக்கு போனதால் சந்தோஷத்தில் திளைத்தான்.

அவன் நண்பரோ கமிஷனை பெற்று கொண்டு அடுத்த நபரிடம் சென்றுவிட்டான்.

நண்பர்களே!
உண்மையாக மட்டும் இருந்தால் போதாது....
சாதுர்யமும் வேண்டும் தானே.


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment