Saturday 17 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-1



ஒரு நாள் சீடன் ஒருவன் குருவிடம் வந்து எனக்கு அதிகளவு கஷ்டம் உள்ளது என்றான் . உடனே குருவானவர் அவனுக்கு பதில் சொல்லாமல் தனித்தனியாக மூன்று அடுப்புகளை பற்ற வைத்து அதில் மூன்று பானைகளில் முழுமையாக நீரை நிரப்பி கொதிக்க வைத்தார்.

பிறகு முட்டை,காரட், காபிக்கொட்டை என தனித்தனியாக ஒவ்வொரு பானையிலும் போட்டுவிட்டு சீடனை உற்று பார்க்க சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியல.சிறிது நேரம் கழித்து குரு அடுப்பை அணைத்தார்.

ஒவ்வொரு பானையிலிருந்தும் ஒவ்வொரு பொருளாக எடுத்தார். குறிப்பாக முட்டை வெந்து இறுகி இருந்தது. காரட் கொழகொழவென இருந்தது. காப்பிக்கொட்டை மட்டும் மணமிக்க பருகக்கூடிய காபி பானமாக மாறியிருந்தது.

அப்பொழுது சீடனை கூப்பிட்டு இப்ப பார்.. கடினமாக இருந்த காரட் கஷ்டத்தில் குழைந்து போய் விட்டது.
உடைந்து விடுவோமோ என்றிருந்த முட்டை வெந்து இறுகி தன் இயல்பை இழந்துவிட்டது. ஆனால் காப்பிக்கொட்டை மட்டும் தன்னை கொதிக்க வைத்த நீரையே சுவைமிகு காபி பானமாக மாற்றிவிட்டது.

ஆக நீ கஷ்டம் வரும் போது காப்பிக்கொட்டையாக இரு உன் இன்னல்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாது போய்விடும்.

ஆக நீங்களும்
காப்பிக்கொட்டையாக மாறி
இருக்கும் இடத்தில்
மணம் பரப்புவீர்களா....

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment