Monday 9 January 2017

'உமாமி'-னு சொல்றாங்களே.... அப்படினா என்ன...?


உமாமி'-னு பேரு வேணும்னா புதுசா உங்களுக்கு தோணலாம்.
ஆனால்,உலகமே இன்று இதனை 'அசினோமோட்டோ' என்கிற வடிவில் சுவையூட்டியாக உணவில்
சேர்த்து ருசி பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த 'உமாமி' என்கிற வார்த்தை ஜப்பானிய மொழியில் இருந்து பெறப்பட்டது.காரணம்,இந்த
புதிய சுவையினை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே...

ஆமாம்...இந்த உமாமி சுவை தரும்
அசினோமோட்டோ எனும் மோனோ சோடியம் குளூட்டாமேட்டை(MSG),
முதன் முதலாக இக்குனே இக்கேடா எனும் ஜப்பானியர் 1907ம் ஆண்டு கடற்பாசியில்(seaweed) இருந்து பிரித்தெடுத்தாலும்,சமீப காலத்தில் தான் அமெரிக்கா போன்ற அனைத்து மேலை நாடுகளும்,தனிச்சுவையாக (உலகின் ஐந்தாம் சுவை) அங்கீகரித்துள்ளன.

உமாமி என்றால் ஆங்கிலத்தில் 'டெலிசியஸ் ' (delicious) என்றும்,தமிழில் 'நற்சுவை' என்றும் பொருள்படும்.

உலகிற்கு வேண்டும் என்றால்,
ஐந்தாம் சுவையாக இருக்கலாம்.
ஆனால்,தமிழனோ அறுசுவையை (இனிப்பு,புளிப்பு,கசப்பு,உவர்ப்பு,
துவர்ப்பு,கார்ப்பு) அன்றே உலகிற்கு அறிமுகப்படுத்திவிட்டான்.

ஆனால்,இன்றோ நாம் அனைவரும்
உலகமயமாக்கலின் விளைவாக இந்த அசினோமோட்டோவிற்கு அடிமையாகி கிடக்கிறோம்.

என்ன செய்றது..நம் நாவிற்கு புதுசு புதுசா ருசி கேட்குது...

இதன் சுவை ஒரு பக்கம் புதிதாக இருந்தாலும்,இதனால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகள் ஏராளம்.ஆமாங்க...அசினோமோட்டோ
நம்மை மெல்ல மெல்லக்கொல்லும் வேதிப்பொருள் ஆகும்.
(ஒன்று தெரியுமா உங்களுக்கு.....?
அசினோமோட்டோ என்றால் MSG விற்பனை செய்யும் உரிமை பெற்ற ஜப்பானிய கம்பெனிகளில் ஒன்று)

எது எப்படியோ....இன்று உலகமே உமாமி சுவைக்கு அடிமை என்றால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

காரணம் ஒன்று தான்..அதன் தனிச்சுவை.

No comments:

Post a Comment