Sunday 29 January 2017

ஏழைகளின் ஐஸ் ஆப்பிள் சாப்பிட்டுருக்கீங்களா....?


இயற்கை தந்த உணவுகள் தான் எத்தனை....எத்தனை....?
நாம் தான் அதனையெல்லாம் மறந்து, உடலுக்கு தீங்கு தரும் உணவுகளை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

வெளிநாட்டுக்காரன் நம் உணவை நல்லது என நாடி வருகிறான்...ஆனால்
நாமோ,நம் உடலுக்கு ஒவ்வாது எனத்
தெரிந்தும் ருசிக்காக அவங்க (வெளிநாட்டுக்காரன்) உணவை நாடிச்செல்கிறோம்.

என்ன செய்ய.....எல்லாம் உலகமயமாக்கலின் விளைவு.

சரி....விசயத்திற்கு வருகிறேன்..

தமிழ்நாட்டில் பெரும்பாலான
கிராமப்பகுதியிலும் மற்றும் ஒரு சில நகரப்பகுதியிலும்,கோடை காலங்களில் அரிதிலும் அரிதாக காணக் கிடைக்கின்றது,இந்த ஏழைகளின் ஐஸ் ஆப்பிள்.

ஆமாங்க....நான் சொல்வது என்னவென்று தெரிகிறதா...?

இதற்கு தமிழில் நுங்கு(nungu)என்று பெயர்.இங்கிலீஸ்காரன் இதற்கு வைத்த பெயர் தான் ஐஸ் ஆப்பிள்
(ice apple).


சரி...இந்த ஐஸ் ஆப்பிளில் அப்படி என்னதான் இருக்கு...?

ஜிங்க்
கால்சியம்
இரும்புச்சத்து
பாஸ்பரஸ்
வைட்டமின்கள் A,B,C
பொட்டாசியம்
சிட்ரினால்
நீர்ச்சத்து
கார்போஹைட்ரேட்
நார்ச்சத்து
புரதச்சத்து

இதை சாப்பிடுவதால் நமது
உடம்பிற்கு ஏற்படும் நன்மைகள்....

உடலை குளிர்ச்சிப்படுத்தும்.

வியர்க்குருவை போக்கும்.

தோலில் உருவாகும் பருக்கள் போக்குகிறது.

வெப்ப பக்கவாதம் குணப்படுத்த உதவுகிறது.

கெட்ட கொழுப்பை மட்டுப்படுத்தும்.

வாந்தி மற்றும் குமட்டலுக்கு மருந்தாகும்.

வயிற்றுக்கோளாறை சரிசெய்யும்.

அஜீரணக்கோளாறை சரி செய்யும்.

வயிற்று வலி நீங்க உதவுகிறது.
(அளவோடு எடுத்துக்கொண்டால்)

கர்ப்பிணிகள் இதனை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் (அசிடிட்டி,
மலச்சிக்கல் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபடலாம்).

சின்னம்மை நோய் நீங்க உதவுகிறது.

உடல் சோர்வு நீங்க...

உடலில் தோன்றும் அரிப்பை குணப்படுத்தும்.

உடல் எடை குறைக்க...

முகப்பொலிவாக்க பயன்படுகிறது.

முகப்பரு நீங்க...

மார்பகப்புற்றுநோய் உருவாக்கும் செல்களை அழிக்க உதவுகிறது.

உடல் நீர்ச்சத்தை தக்கவைக்க...என எண்ணிலடங்காத பல பலன்களை கொடுக்க வல்லது தான்,இந்த நுங்கு எனும் ஐஸ் ஆப்பிள்.


சரி இதனை எப்படி பயன்படுத்தலாம்...?

இளசாக வாங்கி தோல் நீக்கியோ, அல்லது நீக்காமலோ சாப்பிடலாம்.

பால்,சர்பத் பானத்துடன் இதனை சேர்த்து,உடலுக்கு குளுமை தரும்
நுங்கு சர்பத்தாக பருகலாம்.

தோலினை நீக்கி ஜெல் பகுதியை உடம்பினில் பூசலாம்.

மேலே சொல்லப்பட்டது யாவும் எனக்கு தெரிந்தவை மட்டும் தான்.

எது எப்படியோ....நமது பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான நுங்கின் (ice apple) அருமை பெருமைகளை
பற்றி ஓரளவிற்கு அறிந்து கொள்ள, உங்களுக்கு இந்த பதிவு உதவியிருக்கும் என நான் நம்புகிறேன்.

1 comment: