Thursday 5 January 2017

மக்களே உஷார்....உங்க காசு பத்திரம்.


உங்களது ஐந்து ரூபாயை மிச்சப்படுத்த ஆன்லைனில் காஸ் சிலிண்டர் புக் பண்ணும் ஆசை இருக்கா....?

ஒருவேளை அப்படி இருந்தா...இந்த பதிவை கொஞ்சம் வாசிங்க.அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க....புக் பண்ணலாமா அல்லது வேண்டாமா என்று....?

அதானே... இவனுங்க ஆன்லைனில் புக் செய்ய சொல்லும் போதே யோசிச்சேன், இப்படியெல்லாம் ஏதாவது தினுசா யோசிப்பானுங்கனு..

விஷயம் இது தான்....

நாம் ஆன்லைனில் பணம் செலுத்துகையில் ஒரு பக்கம் ஐந்து ரூபாயை கழித்துவிட்டு,மறுபக்கம் எட்டு ரூபாயை வங்கி தொகையாக எடுத்துக்கொள்கிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள்,இதுதான் சலுகையா....?

மேலும் உங்களுக்கு புரியும்படியாக,
சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஆதாரப்பூர்வ புகைப்படத்தை பகிர்கிறேன்,கீழே பாருங்கள்...



இவங்களுது ஒவ்வொரு அறிவிப்பும் நமக்கு நிம்மதியை தரும் என நினைத்தால்...பயமும்,பீதியும் தான் வருகிறது.

ஒரு பக்கம் கொடுக்குற மாறி கொடுத்துவிட்டு,அடுத்த நிமிடமே பிடுங்கி கொள்கிறார்கள்.

என்ன செய்ய....அவங்க
Given-take பாலிசி அப்படி.எல்லாம் டிஜிட்டல் யுகம்.

பணமில்லா பரிவர்த்தனைன்னு சொல்லிப்புட்டு இப்படி நம்
பணத்தையெல்லாம் லவட்டிருவானுக போல...

இது போன்ற சம்பவங்கள் நிகழும் போதெல்லாம்,''ரூம் போட்டுத்தான் யோசிப்பாய்ங்களோ''என்கிற வடிவேலுவின் நகைச்சுவை நம் கண்முன்னே நிழலாடுகிறது.

நல்ல வேளை நான் நேற்று முயற்சி செய்து,எதோ மனமில்லாமல் நாளைக்கு புக் பண்ணலாம்னு விட்டுவிட்டேன்.
இன்னைக்கு தான் தெரியுது
இவனுங்க திருட்டுத்தனம்.
எப்படியோ நான் தப்புச்சுட்டேன்..
நீங்க மாட்டிக்கிட்டு முழிக்காதீங்க.
(முழிக்கும் போதே முழியை தோண்டிருவாய்ங்க)

மக்களே உஷார்......உங்க காசு பத்திரம்.

இந்த பதிவு தொடர்பா உங்களுக்கு
ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால், தயவுசெய்து தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment