Saturday 14 January 2017

உலகமே கொண்டாடும் அறுவடைத்திருவிழா பற்றி உங்களுக்குத் தெரியுமா....?


நாம் நினைக்கிறோம்........
ஏதோ நம் நாட்டில் தான் பொங்கல்,சங்க்ராந்தி,பைசாகி என்கிற பெயர்களில் அறுவடைத்திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது என்று.

ஆனால்,உண்மை நிலையோ வேறு விதமாக இருக்கிறது.

ஆமாங்க....
உலகம் முழுக்க வெவ்வேறு பெயரில் வேளாண்மை சார்ந்த அறுவடை திருவிழாக்கள்,வருடந்தோறும் வெவ்வேறு மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

என்ன... நாம் அரிசியை
மையமாக வைத்து பொங்கலை கொண்டாடுவதைப்போன்று,
மற்ற நாடுகளில் கோதுமை, பழங்கள் மற்றும் திணைவகைகள் அடையாளம் கொண்டு பல அறுவடை திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சரி வாங்க.......
அந்த அறுவடைத்திருவிழாக்கள்
பெயர் மற்றும் அவற்றை
கொண்டாடுகிற நாடுகளின் பெயரையும் காண்போம்.

சியாண்டி திராட்சை அறுவடைத்திருவிழா(Chianti grape harvest festival) - இத்தாலி

இடெல்-மென் ட்ரைபல் அறுவடைத்திருவிழா(Itel’men tribal harvest festival)-ரஷ்யா

மெக்ரெஹென் திருவிழா(mehregan
festival)-ஈரான்

ட்ரங்-து திருவிழா(Trung Thu festival
-வியட்நாம்

ச்சு-சுக் அறுவடைத்திருவிழா
(Chu Suk harvest festival) -கொரியா

மூன் திருவிழா(harvest moon festival)
-சீனா

நினமே-ச்சாய் திருவிழா(Niiname-sai festival) -ஜப்பான்

யாம் அறுவடைத்திருவிழா (yam harvest festival -கானா மற்றும் நைஜீரியா

என்ன நண்பர்களே....
வியப்பா இருக்கா....!!
இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. காரணம் ஒன்று தான்.

அது வேறு ஒன்றும் இல்லை.....

விவசாயம்.

இது தான்,உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் சாதி,மதம்,இனம் மொழி என அனைத்து அடையாளங்கள் கடந்து ஒன்றினைப்பதும்,வாழ வைப்பதும் ஆகும்

என்ன செய்ய....
மனிதன் உயிர் வாழ
வயிறு தேவை.....
வயிற்றுக்கு உணவு தேவை....
உணவுக்கு விவசாயம் அவசியம்.

அத்தகைய விவசாயத்தை
போற்றவே,உலகம் முழுக்க அறுவடைத்திருவிழாவாக மனிதனால், மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

என்ன நண்பர்களே.....
பொங்கல் கொண்டாடியாச்சா....?

No comments:

Post a Comment