Tuesday 3 January 2017

விபச்சாரத்தொழிலுக்கு வரி வசூலிக்கும் தேசம்....


என்னடா........இது....அதுவும்
போயும்போயி விபச்சாரத்திற்கு
வரி வசூல் செய்கிறார்களா.....?

உங்களைப்போல எனக்கும்,இந்த செய்தி ஆச்சர்யத்தை தந்தது.

சரி வாங்க.....அது எந்த நாடு
என்பதை பற்றி கொஞ்சம்
விரிவாக பார்ப்போம்.....

இந்தியாவை ஒருகாலத்தில் அடிமைப்படுத்திய அந்நிய தேசம்...

துலிப் மலர்களுக்கு பெயர் போன தேசம்...

உலகிலேயே பூக்களை விற்கும் மிகப்பெரிய சந்தையினை
கொண்ட நாடு......

சுற்றுலா மூலம் அதிக வருமானம் ஈட்டும் நாடு....

அதிகளவில் கால்வாய்களை கொண்ட நாடு.....

உலகளவில் அதிகமாக சீஸ் எனும் பாலாடைக்கட்டி ஏற்றுமதி செய்யும்
நாடு (கௌடா,ஈடம் சீஸ் உலகப்புகழ் பெற்றவை).....

காற்றாலைகளுக்கு புகழ் பெற்ற
நாடு....

காபி ஷாப் அதிகமுள்ள தேசம்....

கார்களை விட இரண்டு மடங்கு அதிகமாக மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களை தங்கள் பயணத்திற்கு பயன்படுத்தும் மக்கள் கொண்ட நாடு....

இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேல் விபச்சாரத்திற்கும் புகழ் பெற்றது
இந்த தேசம்...

ஆமாங்க.....நான் சொல்வது டச்,ஹாலந்து போன்ற பல பெயர்களை கொண்ட அழகிய மலர்கள் பூக்கும்
நெதர்லாந்து நாடு தான்...


இது நீண்டகாலமாக இருந்தாலும், விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்துள்ளது.

இந்த விபச்சாரத்தொழில் செய்வோர்க்கு இந்த நாட்டில் மிகவும் புகழ்பெற்றது ஆம்ஸ்டெர்டாம் ரெட் லைட் டிஸ்ட்ரிக்ட்(RLD).எப்படி என்றால்...
நம் நாட்டில் மும்பையில் உள்ள சிவப்புவிளக்கு பகுதியான
காமத்திபுரா போன்றது.

ரோட்டர்டாம்(Rotterdam) செக்ஸ் கிளப் மற்றும் தனியார் வீடுகள் மூலம் செய்யும் விபச்சாரத்தொழிலுக்கு பெயர்பெற்றது

ஆம்ஸ்டெர்டாம்,டீ வாலேன் பகுதி
விண்டோ(window) வகை விபச்சாரத்திற்கு பெயர் பெற்றது.

அதாவது மாலை நேரங்களில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கண்ணாடி தடுப்புக்குள் விபசாரத்தொழில் செய்வோர் காட்சி தருவர்.

விரும்புவர்கள் அதாவது வாடிக்கையாளர்கள்,கதவை தட்டி பேரம் பேசி உல்லாசத்திற்கு அழகிகளை அழைத்து செல்வார்களாம்.

பதினைந்து நிமிட உல்லாசத்திற்கு
ஐம்பது யூரோ(50 euro) வசூலிப்பார்களாம்.

சுற்றுலா செல்வோர் மற்றும் அந்த நாட்டை சேர்ந்தவர்களே இவர்களை நாடி செல்கிறார்களாம்.

தற்சமயம் இங்கு விபசாரம் செய்யும் பெரும்பாலோனோர்,இந்த நாட்டை சார்ந்தோர் அல்லாது,வெளிநாட்டவராக இருக்கிறார்களாம் (அதிலும் குறிப்பாக தாய்லாந்து,தென் அமெரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய  நாடுகளை சார்ந்த இளம் யுவதிகள் மற்றும் திருமணமாகி கைவிடப்பட்ட பெண்கள்).

விபச்சாரத்தை தொழிலாக செய்பவர்களில்,90% பெண்களும்,
5% ஆண்களும்,5% மாற்றுப் பாலினத்தவரும் உள்ளனராம்.

இந்த நாட்டு சட்டதிட்டத்தின் படி, விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலை செய்வோர் 18 வயதை கடந்தவராக இருத்தல் அவசியம்.

வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 16 வயதினை கடந்திருத்தல் மிகவும் அவசியம்.இல்லையேல் கடும்
தண்டனைக்குரிய குற்றமாம்.

இந்த தொழில் செய்வோர்க்கு என்று சங்கம் உண்டு.

இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை இலவசம்.அதாவது எப்போது விரும்பினாலும் தங்கள் உடம்பை
காசு செலவில்லாமல் பரிசோதித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனாலும்,இவர்களது எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வங்கிகள் கடன் மற்றும் இன்சூரன்ஸ் தர முன்வருவதில்லையாம்.இவர்கள் வங்கி கணக்கு துவங்குவது மிகவும் கடினமாம் (பெரும்பாலும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை தாள் வடிவிலே பெற்றுக் கொள்கிறார்களாம்...என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்)

இந்த விபச்சாரத்தொழிலை பகுதிநேர தொழிலாகவும் (அதாவது ஒரு சில மாணவிகள்),முழுநேரத்தொழிலாகவும் (வறுமையின் பிடியில் உள்ள தன்னையும்,தன் குடும்பத்தையும் காப்பாற்ற போராடும் பெண்கள்) செய்கின்றனராம்...

ஆனாலும் அந்த பகுதி அரசு நிர்வாகம் இந்த தொழிலை செய்யும் தனி நபர்களிடமும் மற்றும்
பெரிய முதலாளிகளிடமும் (செக்ஸ் கிளப் மற்றும் விடுதி மூலம் விபச்சாரத்தொழில் நடத்துவோர் ) இருந்து வரி வசூல் செய்கிறது.

ஆகவே,இந்த விபச்சாரத்தொழில் செய்யும் நபர்களுக்கு,இந்த நாடு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானதே (மக்களோ, போலீஸோ ஒரு போதும் அடிக்கடி
காசு கேட்டு துன்புறுத்துவதில்லை).

ஆள் கடத்தல் அவ்வப்போது அரங்கேறினாலும்,இந்த விபச்சாரத்தொழிலால் அந்த நாட்டிற்கு பெரியளவில் துன்பம் இல்லை,மாறாக வருமானம் தான்.

ஒருபக்கம் சுற்றுலாவை மேம்படுத்த இது போன்ற தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்கி இருக்கிறார்களோ என்னவோ....? யார் அறிவார்....?

இச்சை கொண்ட பணம் படைத்த
மனிதர்களுக்கு இது போன்ற
நாடுகள் சொர்க்கபுரிகள் தான்..

உலகில் இப்படியும் ஒரு தேசம்...

No comments:

Post a Comment