Wednesday 25 January 2017

இதற்கும் தடையா....?




நம்மூரில் சேவல் சண்டை எந்தளவிற்கு பிரபலமோ,அந்தளவிற்கு அஸ்ஸாம் மாநிலத்தில் இந்த புல்புல் (bulbul)
குருவிச்சண்டை மிகவும் பிரபலம்...

இந்த போட்டியானது அசாம் மாநில அறுவடை திருநாளான மாஃஹ் பிஹூ
(Magh Bihu) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எவ்வாறென்றால் நம்மூரில் பொங்கல் (pongal) சமயத்தில் சேவல் சண்டை கொண்டாடுகிறமோ... அது போலத்தான்.

ஒன்று தெரியுமா...?..
நம்மூர் ஜல்லிக்கட்டு போன்று,அங்கு
எருமை சண்டையும் உண்டு (என்ன இதுவும் தற்போது தடையில் உள்ளது).

கவுகாத்தியில் இருந்து சரியாக
நாற்பது கிலோமீட்டர் (40km)
தொலைவில் உள்ள கஜோ(Hajo) கிராமத்தில் மணிகட் (Monikut)
மலையில் அமைந்துள்ள ஹயக்ரீவ மாதவா கோயிலில் கிராமத்தார்,
வருடந்தோறும் ஜனவரி-பிப்ரவரி மாத மாஃஹ் பிஹூ திருவிழா காலங்களில்
ஒன்றுகூடி,இந்த புல்புல் குருவி பந்தயத்தை நடத்துவார்கள்.

சரி வாங்க....இந்த போட்டி பற்றிய சுவாரஸ்யங்களை சொல்கிறேன்.

இந்த போட்டியில் குறைந்தது 400ல் இருந்து 500 புல்புல் குருவிகள் வரை பங்குபெறுமாம்.

பொதுவாக புல்புல் குருவிகளை போட்டிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக காட்டில் இருந்து கொண்டு
வந்து,அதனை சிறந்த போட்டியாளராக மாற்றுவதற்காக 108க்கும்
மேற்பட்ட சேர்மானங்கள் கொண்ட
உணவுக்கலவை தயாரிக்கப்பட்டு,
பின் அதற்கு வழங்கி போட்டிக்கு தயார்படுத்துவர்.

அந்த உணவுக்கலவையில் என்ன சேர்க்கப்படுகிறது என்பது பற்றிய விவரம் யாருக்கும் சொல்லமாட்டார்கள்,
அந்த புல்புல் குருவி வளர்ப்போர்.

சரியாக,அதாவது போட்டி நடைபெறும் நாளான மாஃஹ் பிஹூ திருவிழாவிற்கு முந்தைய நாள்
முழுக்க,புல்புல் குருவிகளுக்கு
உணவு வழங்காமல் பட்டினிபோட்டு விடுவார்கள்,அந்த புல்புல் குருவி
உரிமையாளர்கள்.

போட்டி அன்று,போட்டியில் பங்கெடுக்கும்  பசியோடு உள்ள இரு
புல்புல் குருவிகளுக்கு இடையே
வாழைப்பழத்தை உணவாக மாற்றி, மாற்றி நீட்டி அவைகளை ஏமாற்றி, உணவுக்காக சண்டை போடும் வாய்ப்பினை உருவாக்குவார்கள்.

அதற்கேற்றாற் போல் அந்த இரு குருவிகளுக்கு இடையே சண்டை உருவாகும்.இறுதியில் வெற்றிபெறும் புல்புல் குருவி உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும்.

இரண்டு குருவிகளின் காலில்
கயிறு கட்டப்பட்டு,குருவியானது  உரிமையாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இறுதியாக வெற்றி பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து புல்புல் குருவிகளும் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டுவிடும்.

போட்டியில் வெற்றிபெற்றவருக்கு முதல் பரிசாக ரூபாய் 1501ம் இரண்டாம் பரிசாக ரூபாய் 501ம் மூன்றாம் பரிசாக ரூபாய் 301ம்,கேடயமும் பரிசாக
வழங்கப்படும்.

புல்புல் குருவிச்சண்டை இங்கு காலம் காலமாக நடைபெற்று வந்தது.ஆனால் தற்போது இங்கும் விலங்கு நல வாரியம் (AWBI) மூலம்,இந்த போட்டி நடைபெற தடைவிதித்துள்ளது கவுகாத்தி உயர்நீதிமன்றம் (காரணம் பறவைகளை துன்புறுத்துகிறார்கள்).

இதற்கும் ஜல்லிக்கட்டு போல தடை நீங்குமா....?

No comments:

Post a Comment