Thursday 12 January 2017

பொங்கலைப் போற்றும் சிங்கப்பூர்...


தமிழர்கள் மிகுதியாக வாழ்வதோடு மட்டுமல்லாது,மரியாதையுடன் நடத்தப்படக்கூடிய உலக நாடுகளில்
மிக முக்கியமானது சிங்கப்பூர்.

நம்மூரில் பொங்கலை சிறப்பாக, மனமகிழ்வோடு கொண்டாட முடியாமல் நாம் திண்டாடி கொண்டிருக்கிறோம்.

ஆனால்,நம் சக தமிழ் மக்கள் வாழும் சிங்கப்பூரில் இன்று பொங்கல் திருநாள் கோலாகலமாக
துவங்கி சிறப்புற நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக தமிழர்கள் அதிகம்
வசிக்கும் பகுதி 'லிட்டில் இந்தியா'
பகுதி முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.


சாலையின் இருபக்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.அவையாவும் தமிழர் கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.

அந்த வகையில்,அவர்களாவது நிம்மதியாக தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடுகிறார்களே.. என்பதில் உண்மையில் தாய்த்தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியே..

ஆனால்,நம் தாய் தமிழகத்திலோ,
பொங்கலின் அங்கமான ஜல்லிக்கட்டு நடத்த  மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் சில ஆண்டுகளாக மன்றாடி கொண்டிருக்கிறோம்.

நான் கேட்குறேன்...நாம் காலம் காலமாக கடைபிடித்து வரும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இவர்கள் யார்...?

ஏன்...நாம் மன்றாட வேண்டும்...?

இது போன்ற உணர்வு சார்ந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு்,தமிழ் இனத்தின் கலாச்சாரத்தை ஒழிக்க எடுத்த முயற்சியோ....என எண்ணத் தூண்டுகிறது

நமது இனத்திற்கும்,கலாச்சாரத்திற்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்காத
நாட்டில் வாழ்வது மிகவும் வேதனை அளிக்கிறது.

நீங்களே சொல்லுங்கள்....?

நாம் தேர்ந்தெடுத்த கடைந்து எடுத்த,
வடி கட்டுன,பயனில்லா இந்த முட்டாள் அரசியல்வாதிகளால் நமக்கு என்ன பயன்...?

இங்கு இருக்கிற எந்த ஒரு பிரதான அரசியல் கட்சிக்கோ,அந்த கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கோ,இதை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது...?

தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டம் போடும் போது,எதிர்க்கத்துணியாது
வேடிக்கை பார்ப்பான்......

பதவியை ருசித்து,அனுபவித்து விட்டு அவர்கள் தான் காரணம் என்று வெட்கமில்லாமல் மக்களிடம் வோட்டு அரசியல் செய்வான்....

இன்னொரு கட்சியோ,அவர்கள் இருவர் தான் காரணம் என்று கைவிரிப்பான்....

ஏண்டா மடையங்களா.......?

அவன் தான் சரியில்லை...என்று தானே
மக்களாகிய நாங்கள் உங்களை தெரிவு செய்தோம் என்று,என்றாவது உங்களுக்கு உரைத்து இருக்கிறதா...?

அப்படி ஒருவேளை உங்களுக்கு உரைத்து இருந்தால்....
வாய் பேசாது,செயலில் அல்லவா...காட்டியிருப்பீர்கள்.

பதவி ஆசை பிடித்த கையாலாகாதா
உங்களை தேர்ந்தெடுத்ததற்காக, நாங்கள் எல்லாம் கூனிக்குறுகியல்லவா நிற்கிறோம்.

இப்படி அரசியல்வாதிகள்(வியாதிகள்) வாழுகிற தேசம்.குற்றம் சொல்லியே.... நாட்டையே குட்டிச்சுவராக்க பிறந்தவர்கள்,ஒரு போதும் மாறப்போவதில்லை.

மாறாக சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் தாங்கள் வாழ்ந்த மண்ணுக்கும் , மக்களுக்கும் உண்மையாக இருந்தார்கள்.இப்போதும் இருக்கிறார்கள்.



அதன் வெளிப்பாடாகவே,சிங்கப்பூர் நாடு தான் உயர்ந்த நிலை எட்ட காரணமாக இருந்த தமிழர்களையும்,அவர்களது கலாச்சாரத்தையும் கொண்டாடுகிறது...

ஆனால் இந்தியாவோ,அரசியல் வாதிகளின் அல்ப காரணங்களுக்காக
தமிழர்கள் நிம்மதியாக பொங்கல் விழா கொண்டாட முடியாமல் வருடம் தோறும்
திண்டாட வைக்கிறது.

இது மாறனும்....

அந்தந்த பகுதி வாழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இந்தியா என்பது பல கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாடு என்பதனை மனதில் கொண்டு சட்டம் இயற்ற வேண்டும்.

தவிர உணர்வை நசுக்கும் விதமாக செயல்படக்கூடாது என்பது தான் இங்கு வாழும் அனைத்து தமிழர்களின் எண்ணமும் வேண்டுகோளும்....

இல்லையேல் தேசீயம் என்கிற உணர்வே,தமிழர் மனதை விட்டு
மறைந்து போய்விடும் என்பதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

சாதி,மதம் கடந்து ஒரு இனமாய்
ஜல்லிக்கட்டுடன் கொண்டாடும் பொங்கலை அனுமதிப்பீர்களா....?..
என்பது தான் கோடானுகோடி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

நிறைவேறுமா......?

நிறைவேற்றுவீர்களா....?

2 comments:

  1. Did singapore govt allowed Jalli kattu?

    ReplyDelete
  2. நண்பருக்கு வணக்கம்...

    அதற்கான சூழல் தமிழகம் போன்று அங்கு எழவில்லை என்பதே உண்மை.

    காரணம்,மிகவும் சிறிய நிலப்பரப்பு
    (ஒரு சதவீதத்திற்கும் கீழே உள்ள நிலப்பரப்பில் மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது) மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்த நாடு.
    உணவுப்பொருள்களுக்காக பிற நாட்டை சார்ந்திருக்கிற தேசம்.
    அத்தகைய நாட்டில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்களை கொண்டாடும் விதமாக பொங்கலை அனுமதிப்பதே பெரிய விஷயம் தானே...

    இன்றுவரை இல்லை.நாளை
    சட்டப்படி அனுமதி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதே நிதர்சனம்.

    ReplyDelete