Saturday 14 January 2017

தமிழனை இன்றும் உயிர் காக்கும் வெள்ளையன்....



வீணாப்போய் மேற்கே அரபிக்கடலில்
கலக்கும் தண்ணீரை,கிழக்கு பக்கமாய் திருப்பி,தமிழக வறட்சி நிலங்களை வளம் கொழிக்க செய்ய பாடுபட்டவர்...

அதற்காக,தன் சொத்து முழுதையும் விற்று வைராக்கியமாக,மக்கள்
துணை கொண்டு தடுப்பணை
கட்டிய வெள்ளைக்கரிகாலன்....

ஒரு காலத்தில் மதுரை மற்றும் ராமநாதபுரம் சார்ந்த மாவட்ட மக்கள்
மழையை மட்டும் சார்ந்தே விவசாயம் செய்தனர்.இன்று ஓரளவிற்கு நதி சார்ந்து விவசாயம் நடக்கிறது என்றால் அதற்கு முழுமுதற்காரணம் இவரே...

மேலும்,தென் தமிழக மாவட்டங்கள் ஓரளவிற்கு வறட்சியில் இருந்து மீண்டு இருக்கிறது என்றால் இவர் தான் காரணம்....

நான் யாரைப் பற்றி சொல்கிறேன்
என்று தெரிகிறதா.....?

ஆமாங்க..

அவர் வேறு யாரும் இல்லை. முல்லைப்பெரியாறு அணை
கட்ட காரணமான
பென்னி குயிக்....

தன்னுடைய அணை கட்டுகிற முயற்சி மற்றும் வேண்டுகோளுக்கு ஆங்கிலேய அரசு செவி சாய்க்காவிட்டாலும், வறட்சியால் துயரப்படும் தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்க, துணிச்சலுடன் போராடி வெற்றியும் பெற்றார்.

அவரது செயலை போற்றும் விதமாக அந்த பகுதி மக்கள்,இன்றும் அவரை கடவுளாக பாவித்து பொங்கல் வைத்து
வணங்குகின்றனர்.

மேலும்,தங்கள் பிள்ளைகளுக்கு அவர் பெயர் சூட்டி பெருமை கொள்கின்றனர், என்றால் பார்த்திக்கொள்ளுங்கள்.... மக்கள் அவர் மீது வைத்துள்ள பாசத்தை.

அவர் இனம் மட்டும் வெள்ளை இல்லை; அவரின் குணமும்,மனமும் வெள்ளை
தான்....

அத்தகைய வெள்ளை மனம் கொண்ட,
வாழும் தெய்வம் பென்னி குய்க்கிற்கு இன்று (ஜனவரி 15) பிறந்த நாள்.

இன்றைய நாளில் நாமும் அவரை
நினைவில் கொள்வோம்..

No comments:

Post a Comment