Friday 20 January 2017

ஜல்லிக்கட்டுக்கு முதலில் தடைவிதித்த தமிழர்..


இன்று நமது கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க கோரி,மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மன்றாடிக்
கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

மேலும் நாம் அனைவரும் ஒருசேர
ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா (peta)
தான் காரணம் என்று,அந்த
அமைப்புக்கு எதிராகவும் போராடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால்,உண்மையில் இதுபோன்ற அமைப்புகள் பல ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து போராட உறுதுணையாக இருப்பது ஒரு
உயர்நீதிமன்ற தீர்ப்பு.

ஆமாங்க..அத்தகைய வரலாற்று பிழையான தீர்ப்பினை வழங்கி,
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர
தடை விதிக்க முதன் முதலாக
அச்சாரம் போட்ட ஒரு தமிழ்ப்பெண் நீதிபதி என்றால் வியப்பாக இருக்கிறதா...?

ஆம்....இது தான் தமிழர்களால் ஜீரணிக்க முடியாத வரலாற்று
உண்மை.

அந்த தமிழ்ப்பெண் நீதிபதியின் பெயர்......R.பானுமதி.

அவர் தமிழக(chennai) உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதியாக இருந்த பொழுது,ரேக்ளா ரேஸ் தொடர்பான வழக்கில் தான்தோன்றித்தனமாக,வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத ஜல்லிக்கட்டிற்கும், ரேக்ளாவுடன் சேர்த்து தடை விதித்து உத்தரவிட்டார் என்கிறார்,ரேக்ளா தொடர்பான வழக்கில் மனுதாரர் முனுசாமித்தேவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜி செலான்.

குறிப்பாக தான் அவரிடம்(நீதிபதி
R.பானுமதி),ஏற்கனவே இது போன்ற வழக்குகளில்,மூத்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பினை முன்னுதாரணம் காட்டி விளக்கிய போதும்,அவர் இதனை 'மிருகவதை' என்றும்,ஆகவே இனியும் இதனை ஏற்கமுடியாது என்று கூறி,ரேக்ளா ரேஸ்,ஜல்லிக்கட்டு போன்ற காளை சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் அனைத்தையும்
தடை செய்வதாக தீர்ப்பினை வழங்கி அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

ஏன்.....அவ்வாறு ரேக்ளா ரேஸ்
வழக்கிற்கு சம்பந்தமேயில்லாத அத்தகையதொரு தீர்ப்பினை வழங்கினார்,என்று இதுவரை தெரியவில்லை என்கிறார் அந்த வழக்கறிஞர்.

ஒன்று தெரியுமா....?...நண்பர்களே...

இவர் (R.பானுமதி) தான் தமிழ்நாட்டை சேர்ந்த முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஆறாவது பெண்
உச்ச நீதிமன்ற நீதிபதியும் கூட.
தற்போதும் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார்....

ஒரு காலத்தில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த தமிழ்ப்பெண்மணி,நாட்டின்
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்,என்கிற
செய்தி கேட்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த,
பெருமைபட்டுக்கொண்ட
கோடானுகோடி தமிழர்களில்
நானும் ஒருவன்.

இந்த பதிவினை போடும் முன்பு
வரை,தமிழனாய் அவர் மேல் நான் வைத்திருந்த அளவுக்கதிகமான
மரியாதை அனைத்தும்
சுக்குநூறாகிப்போனது.

காரணம் ஒன்று தான்...அவர் தன் மனதிற்கு விரும்பியோ,விரும்பாமலோ பிறப்பித்த ஜல்லிக்கட்டு மீதான தடை
உத்தரவு.

தனிப்பட்டு உங்களை விமர்சிப்பதற்க்காக எழுதப்பட்ட பதிவல்ல இது...

ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு,
பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் பிள்ளையாக,சாமான்ய மனுஷனாக என் மனதை துளைத்தெடுத்துக் கொண்டிருக்கும் கேள்விகளே...?

சராசரி மனுஷனாக நான் உங்களுக்கு முன்வைக்கின்ற கேள்விகள்...?

பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தானாக முன்வந்து தடை செய்வதன் உண்மையான
காரணம் என்ன.....?

ரேக்ளா ரேஸ் தொடர்பான வழக்கில் அந்த போட்டிக்கு மட்டும் தடை விதிக்காமல்,ஒட்டுமொத்தமாக
காளை சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தடை
விதிக்க காரணம் என்ன...?

சரி...உங்களுக்கு உண்மையில் காளையின் மீது தனிப்பட்ட அக்கறை இருப்பின்,ஏன் காளையினை கொல்வதற்கும்,உண்பதற்கும் தடைவிதிக்கவில்லை....?

மூத்த நீதிபதிகள் வழங்கிய
தீர்ப்பினை வழக்கு தொடர்பாக,
முன்னுதாரணமாக எடுத்து சொன்னபிறகும் கருத்தில்
கொள்ளாததன் பின்னணி என்ன....?

தமிழனாய் ஒரு கேள்வி...?

தமிழர் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டை ஒழித்துக்கட்ட துணிந்த நீங்கள்,தமிழச்சியாய் தம் இனத்திற்கு
தவறு இழைத்துவிட்டோமென்று, என்றாவது உங்கள் மனதிற்குள்
உறுத்தியது உண்டா....இல்லையா...?
(தெரிந்தோ,தெரியாமலோ நீங்கள் வழங்கிய தீர்ப்பு,தமிழகமே ஸ்தம்பித்து நிற்க காரணமாக இருக்கிறது இன்று..)

ஜல்லிக்கட்டு தடைக்கு ஆணிவேரே நீங்கள் தான்...அதுவும் தமிழ்ப்பெண் என்று நினைக்கும் பொழுது, உண்மையிலேயே ரத்தம் கொதிக்கிறது.

உங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற்பட்டு
நீதியினை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இருந்த நீங்கள் ,
உங்கள் சுயநலத்திற்காக உணர்ச்சிவயப்பட்டு, அவசரக்கோலத்தில் சர்வாதிகார மனப்பான்மையோடு, தான்தோன்றித்தனமாக எழுதிய தீர்ப்பாகவே தோன்றுகிறது.

தமிழ் கலாச்சாரம் தெரிந்த நீங்களே தடை விதிக்கும் பொழுது,தமிழ் கலாச்சாரம் அறியாத நீதிபதிகளிடம்,
ஒரு தமிழனாய்...எவ்வாறு நியாயத்தை எதிர்பார்க்க முடியும்...? (உங்கள் தீர்ப்பே மற்ற நீதிபதிகளுக்கு முன்னுதாரணம் ஆகிவிடாதா..)

இறுதியாக எனக்கு ஒரு ஐயம்...!! நீங்கள் ஒன்றும் பீட்டா ஆதரவாளர் இல்லையே...!!

நீதிபதிகளே....நீங்கள் ஒன்றும் தேவதூதர்கள் இல்லை.
நீங்கள் அவசரப்பட்டு எழுதுகிற தீர்ப்புகள் ஒரு இனத்தையே இன்று
வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

நாங்கள் காளைகளை வஞ்சிக்கிறோமென்று;
நீங்கள்
எங்களை வஞ்சிக்கிறீர்கள்....

No comments:

Post a Comment