Thursday 19 January 2017

தமிழருக்கு எதிராக மோதியும்....நீதியும்...




ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் தங்களால் பிறப்பிக்க இயலாது என
கை விரித்திருக்கிறார் மோடி,என்கிற செய்தியை கேட்டவுடன் தமிழனாய் என் நெஞ்சம் குமுறுகிறது.

நாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாடு மாநில மக்களின் கலாச்சார அடையாளமான வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு,உங்களுக்கு வேண்டும் என்றால் பொழுதுபோக்காக தெரியலாம்.

ஆனால்,ஜல்லிக்கட்டு என்பது
பல்லாயிரம் ஆண்டுகளாக
தமிழர்களாகிய எங்களது உயிரிலும்,
உணர்விலும்,வாழ்விலும் ரத்தமும் சதையுமாக கலந்து கிடக்குறது.

அத்தகைய தமிழரின் வீர விளையாட்டினை நடத்த அவசர
சட்டம் பிறப்பிக்க முடியாது,காரணம்... வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்று நியாயம் கற்பிக்க முயலுகிறீர்கள்.

அந்தளவிற்கு நீங்கள்
நியாயவான்களா....?..என
உங்களுக்கு மனசாட்சி என்று
ஒன்று இருந்தால் நீங்களே
கேட்டுப் பாருங்கள்...

மேலாண்மை காவிரி வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது நீங்கள் என்ன செய்தீர்கள்....?

மேலாண்மை காவிரி வாரியம் நிச்சயம்
அமைப்போம்...என சொல்லிவிட்டு,
சில தினங்களிலேயே எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றீர்கள்.
(கர்நாடகத்தில் தங்களது செல்வாக்கை இழக்கக்கூடாது என செய்த அரசியல்
கூத்து என் ஊர் உலகமே அறியும்)

சரி...இதுவரைக்கும் நீங்கள் அவசர சட்டம் போட்டதே இல்லையா...?

மோடி அவர்களே....
உங்களது சுயநலனுக்காக,2014ல்
உங்களது தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன்,நீங்கள் கூட்டிய முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே,
நிர்பேந்திரா மிஸ்ரா என்பவரை பிரதமரின்(தனக்கு) முதன்மைச் செயலாளராகப் பதவியில் அமர்த்த,தொலைத்தொடர்பு துறையில் இருந்த அவரை பணிமாற்றம் செய்வதற்காக TRAI-ன் சட்டத்திருத்தத்தின் மீது அவசர சட்டம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டு அது ஜனாதிபதி ஒப்புதலுடன் அவசர சட்டமாகப் பிறப்பித்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கா....?இல்லை...அதுவும் மறந்துபோச்சா..! மக்களாகிய எங்களிடம் கொடுத்த தேர்தல் வாக்குறுதி போல.

அடுத்ததாக....நிலமசோதா சட்டம் இயற்ற மூன்று முறை அவசர போட்டதை இந்த உலகமே அறியும்.

இதுபோக,முந்தைய BJP கூட்டணி ஆட்சியில் உங்கள் அரசியல் ஆசான்
A.B வாஜ்பாய் பிரதமர் ஆக
இருந்தபோது மட்டும்,சுமார்
58 முறை அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எல்லாம் சரி...நீங்கள் உண்மையிலேயே
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிப்பவராக இருப்பவர் என்றால்....?

ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு எதிராக
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருமெனில், அடுத்த நிமிடமே ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட திருத்தம் நிச்சயம் மேற்கொள்வேன்,என உங்களால் தமிழர்களாகிய எங்களுக்கு உத்தரவாதம் தரமுடியுமா...?

அப்படி அறிவிக்க உங்களுக்கு
திராணி இருக்கா......?...நிச்சயம் உங்களுக்கு இருக்க வாய்ப்பே
இல்லை.

காரணம்,உங்களுக்கு தமிழர்
நலனில் உண்மையான அக்கறை இருந்திருப்பின்,மூன்று வருடமாக ஜல்லிக்கட்டு மீதான தடையினை
நீக்க முயற்சி செய்திருப்பீர்களே...!

உங்களது வோட்டு அரசியலுக்காக, தமிழரது நலனில் தமக்கு அக்கறை
இருக்கிறது என காண்பிப்பதற்காக தமிழில் ட்விட் போடுவது,வேட்டி கட்டி வேஷம் போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உங்களது பேச்சுக்கும், பித்தலாட்டத்திற்கும் இந்தியாவின்
மற்ற மாநிலங்கள் வேண்டுமென்றால் தலையாட்டலாம்.....தமிழர்களாகிய நாங்கள் ஒரு போதும் உங்களை நம்பவோ,ஏமாறவோ தயாரில்லை.

அதிகாரத்தை கையில் வைத்துக்
கொண்டு அவசர சட்டத்தை இயற்ற முடியாது என்கிறீர்கள்.

மக்களுக்காக தான் சட்டமே தவிர, சட்டத்திற்க்காக மக்கள் இல்லை என்பதை உணர்ந்து இருந்தால் நிச்சயம் தமிழர் உணர்வில் கைவைத்து இவ்வாறு வேடிக்கை பார்த்திருக்க மாட்டீர்கள்.

எங்களது கலாச்சாரம்,பண்பாடு பற்றி தெரியாத உங்களைப்போன்ற அரசியல்வாதிகளிடம் நாட்டை கொடுத்தது எங்களது பிழையோ....
என எண்ணத் தோன்றுகிறது.

சரி...அரசியல்வாதிகள் இப்படி இருக்கிறார்களே....என்று நீதிமன்றம் சென்றால்,நீதிமான்கள் அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என, தாங்களும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்களே...என  தங்களது நடவடிக்கையின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.

மக்களது பாரம்பரியத்திற்கும், உணர்வுக்கும்,கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்காத ஒரு சார்புடைய நீதிபதிகளை என்னவென்று சொல்வது.....?
வெட்கித் தலைகுனிவதை தவிர்த்து.

உண்மையில் நீதிமான்களுக்கு அக்கறையிருந்து இருந்தால்....

கலாச்சார,பாரம்பரிய விஷயங்களில்  நாங்கள் தலையிடமாட்டோம் என ஒதுங்கியிருக்க வேண்டும்.

நாட்டின் ஒரு மாநில மக்கள்
ஒருபக்கம் கொந்தளித்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது,
சூழல் கருதி காலம் தாழ்த்தாது நீதிமன்றம் தீர்ப்பை வழங்காமல் பார்வையாளர் போல் வேடிக்கை பார்ப்பது கொடுமையிலும் கொடுமை.

இதற்கு முன் நீதிபதிகள் யாரும் விரைவாக தீர்ப்பு வழங்கியதே இல்லையா....?...(உலகறிந்த நீதிபதி
குமாரசாமி தீர்ப்பை மறக்க முடியுமா....)

இதில் இருந்து ஒன்றே ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது.ஒருவேளை நீங்களும் மோடி போன்று தமிழர் நலனில் அக்கறையில்லாதவர்களோ.... என்னவோ....என்று..?

அது உங்களது தாமதமாகிற தீர்ப்பின் மூலம் வெளிப்படையாக தெரிகிறது.

தமிழர் விஷயத்தில் நீதிபதிகளும், அரசியல்வாதிகளும் அக்கறையின்மையுடன் செயல்படுவது வெட்கக்கேடானது.

உங்கள் இருவரது வஞ்சகத்தை, எங்களது அகிம்சை போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்வோம்...சட்டத்தை மாற்றியமைப்போம்...அது நிச்சயம்.

பிற வேடிக்கை மனிதரைப்போல், தமிழனை வீழ்வான் என நினைத்தாயோ....

No comments:

Post a Comment