Monday 23 January 2017

ஜல்லிக்கட்டுக்காக தன்னுயிர் தந்த தமிழச்சி...


ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து
தமிழ் இனத்தில் உள்ள ஆண்,பெண் என வயது வித்யாசம் பார்க்காது,தமிழக்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து
அனைவரும் போராடினர்.

அப்படி போராடிய அனைவரின் தற்போதைய நிலை என்ன....?..
என்பது யாருக்கும் தெரியாது.

காரணம்,இறுதிநாளான நேற்று நடந்த வன்முறை சம்பவங்கள் அனைத்தும், தமிழர் மனதில் என்றும் ஆறாத வடுவாக இருக்கும் என்றால் மிகையில்லை.

அதிலும் குறிப்பாக,அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று,நேற்று (23jan-2017) நடந்த வன்முறையில்  இந்த இளம்பெண் பலியானார்,என்று சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வலம் வருகிறது.


இந்த சகோதரியின் இறந்த புகைப்படம் ஏனோ...என் கண்களை குளமாக்கி கொண்டிருக்கிறது.

உண்மையில் இந்த பெண் யார்...?
எந்த ஊரில் இருந்து வந்தார்....?
என்கிற எந்த விவரமும் இதுவரை
இந்த இளம்பெண்ணை பற்றி தெரியவில்லை.

அலங்காநல்லூரில் போராடிய தோழர்கள் யாருக்கேனும்
இவர் பற்றிய விவரம் தெரிந்தால்,
உடனே தயவுகூர்ந்து பகிருங்கள்.....

அந்த இளம்பெண் வரவிற்க்காக காத்திருக்கும் அவரது
பெற்றோரை நினைத்து,ஒரு
தமிழ் சகோதரனாய் மிகவும்
வருத்தப்படுகிறேன்,துயரப்படுகிறேன்.

இவரைப்போன்று எத்தனை தமிழர்களை,இந்த வன்முறை காவு வாங்கியதோ...?எனக்கு தெரியாது.

இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்,இவரைப்
போன்று ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக உயிரை இழந்த சகோதர, சகோதரிகளுக்கு உரிய
நியாயம் பெற்றுத்தர வேண்டுமா...
வேண்டாமா...?

குறிப்பாக இவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அனுசரணையாக இருப்பது தமிழ் சொந்தங்களாகிய அனைவரின் கடமையும் கூட.

எனக்குள்ள ஒரே வருத்தம் மற்றும் ஆதங்கம்......

நேற்று போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்த
ஒருவர் கூட,இவரை போன்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் இழந்தவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இனிமேலாவது சாதி,மதம் கடந்து தமிழ் இனத்திற்காக போராடி,உயிர் இழந்தவர்கள் பற்றி நினைவில் கொள்வதோடு,அவர்களது
தியாகத்தை போற்ற வேண்டும்.

செய்வார்களா....?

உணர்வுக்கு மதிப்பளிக்கும் நாம்,
நம் உயிருக்கும்
மதிப்பளிக்க வேண்டும்.

1 comment:

  1. உயிர்நீத்த தமிழச்சியின் நினைவைப் போற்றுவோம்.

    இந்தத் துயரச் செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவர வேண்டும்.

    ReplyDelete