Sunday 1 January 2017

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் இந்தியா....மாட்டுக்கறி (பீப்) ஏற்றுமதியில் முதலிடம்...


ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போடும் இந்தியா,மாட்டுக்கறி ஏற்றுமதியில்
கடந்த 2016ஆம் ஆண்டு முதலிடம் வகித்தது என்பது உங்களுக்கு தெரியுமா....?

ஆமாங்க...அதற்கான புள்ளிவிவரத்தை தருகிறேன் பாருங்கள்.

மாட்டுக்கறி உற்பத்தியில் இந்தியா
ஐந்தாவது இடத்தில் உள்ளது.அதாவது உலகளவிலான ஒட்டுமொத்த மாட்டுக்கறி உற்பத்தியில்,இந்தியாவின் பங்கு மட்டும் 7.03% சதவீதம் (42,50,000
மெட்ரிக் டன் எடையுள்ள மாட்டுக்கறி)
என்ற அளவில் உள்ளது.

மாட்டுக்கறி உற்பத்தியில்
முதல் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று தெரியுமா....?

வேறு யார்...............ஜல்லிக்கட்டுக்கு பிரதானமாக எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டாவின் பிறப்பிடமான வல்லரசு நாடான அமெரிக்கா தான் உள்ளது
(மாட்டுக்கறி உற்பத்தி அளவு சுமார்
1,13,89,000 மெட்ரிக் டன்).

மாட்டுக்கறி உற்பத்தியில் சற்று பின்தங்கினாலும்,மாட்டுக்கறி
ஏற்றுமதியில்......?



அமெரிக்காவை நான்காம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளி,முதலிடத்தை பிரேசிலுடன்  பகிர்ந்துகொண்டுள்ளது இந்தியா.

சற்று ஏறக்குறைய 18,50,000 மெட்ரிக் டன் எடையுள்ள மாட்டுக்கறியை உலக நாடுகளுக்கு கடந்த ஆண்டு மட்டும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இது ஒட்டுமொத்த மாட்டுக்கறி (பீப்) ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு
19.60% சதவீதம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பிரேசில் இதே அளவிலான அதாவது 19.60% சதவீதம் என்றளவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்துள்ளது.

மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா 14.67% என்கிற சதவீத அளவிலும்,
நான்காம் இடத்தில் அமெரிக்கா
13.85% என்கிற சதவீத அளவிலும்,
மாட்டுக்கறியினை கடந்த வருடம்
மட்டும் ஏற்றுமதி செய்துள்ளது.

இதனை தடுக்க நாதியற்ற
இந்திய அரசு மற்றும் நீதிபதிகள்,
ஜல்லிக்கட்டு மூலம் நாட்டு மாடுகள் துன்புறுத்தப்படுவதாக நீலிக்கண்ணீர்
வடிக்கும் பீட்டா போன்ற அமெரிக்க அமைப்புகளுக்கு துணை போவது
வெட்கக்கேடானது.


ஒரு பக்கம் கசாப்புக்கடையில்
மாட்டை கூறுபோட்டு விற்றுக்கொண்டு, மறுபக்கம் மாட்டை துன்புறுத்தக்கூடாது என  சொல்வது உண்மையில்
வேடிக்கையாகவும்,வேதனை தரும் விஷயமாக உள்ளது.

இவர்களது பாஷையில் சொல்லவேண்டும் என்றால்
உயிரை துன்புறுத்தக்கூடாது,
ஆனால் சாகடிக்கலாம்.

எங்கே இருக்கிறது....உங்கள் நீதி...?

ஒரு கண்ணில் வெண்ணெயும்,
ஒரு கண்ணில் சுண்ணாம்பும்
வைப்பது போல் இருக்கிறது
உங்கள் சட்டமும்,நியாயதர்மமும்.

உண்மையில் உங்களுக்கு
நாட்டுமாடுகளின் மீது அக்கறை இருந்தால்,அவற்றைக் கொல்லவும், அதனை ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றுங்கள்.

No comments:

Post a Comment