Thursday 8 December 2016

எம்பாமிங்... அப்படினா என்ன...?


இறந்து போன உடலை அதன் உருவம் சிதையாது பாதுகாக்கும் ஒரு மருத்துவக் கலை தான் எம்பாமிங்
(Embalming).இதனை தமிழில் பிணசீரமைப்பு (or) உடல் பதனிடல்
என்று பொருள் கொள்ளலாம்.

நான்கு விதமான எம்பாமிங் முறைகள் நடைமுறையில் உள்ளது. அவையாவன......
surface embalming
arterial embalming
cavity embalming
hypodermic embalming

பிணசீரமைப்பு கலை என்பது இறந்த உடலின் ரத்த நாளங்களில் இருந்து ரத்தத்தை முழுமையாக நீக்கி விட்டு அதற்குப்பதிலாக பார்மால்டிஹைடு, குளுட்டரால்டிஹைடு,மெத்தனால் கொண்ட ரசாயனக்கலவையினை
உடலினுள் செலுத்தி இறந்த உடலை சிறப்பாக பேணி பாதுகாக்கும் ஒருவித முறையே ஆகும்.

17ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை மேலே சொன்ன ரசாயனக்கலவைக்கு பதில் ஆர்சனிக் மையப்படுத்திய ரசாயனக்கலவை பயன்படுத்தப்பட்டது.
ஆர்சனிக் என்பது மனிதனைக் கொள்ளும் கொடிய விஷத்தன்மை உடைய வேதிப்பொருள் ஆகும்.

இதனால் பதனிடல் செய்யப்பட்ட இறந்த உடலை மண்ணில் புதைக்கும் பொழுது மண்ணை மட்டுமல்லாது, மண்ணில் மறைந்துள்ள குடிநீர் ஆதாரத்தையும் விஷமாக்கிடும்.ஆகவே தான் ஆர்சனிக் பதில் பார்மலின் அடிப்படையிலான ரசாயனக்கலவையினை பிணசீரமைப்பு முறைக்கு பயன்படுத்த தொடங்கினர்.

இந்த பார்மலினை 1868ம் ஆண்டு,
A.W ஹாப்மன் என்கிற ஜெர்மன் வேதியியலார் கண்டுபிடித்தார்.பின்னர் இந்த பார்மலின் அடிப்படையிலான ரசாயனக்கலவை தான்,இறந்த உடல் பதனிடல் மற்றும் பதப்படுத்துதலில் இதுநாள் வரை முக்கிய பங்கு வகிக்கிறது.

17ம் நூற்றாண்டில் வில்லியம் ஹார்வே
என்பவர் புதிய நிறக்கரைசலை இறந்த மனித உடலினுள் செலுத்தி மனித ரத்த ஓட்டத்தை முதல் முதலாக கண்டறிகிறார்.அதன் பின்னர் வில்லியம் ஹண்டர் இதே முறையினை பயன்படுத்து எம்பாமிங் செய்ய முனைகிறார்.

18ம் நூற்றாண்டில் வில்லியம் ஹண்டர் அவர்களின் சகோதரர் ஜான் ஹண்டர் இதனை மென்மேலும் மேம்படுத்தி இன்று இந்த பிணசீரமைப்பு கலைக்கு முன்னோடியாக திகழ்கிறார் என்றால் மிகையில்லை.

இத்தகைய மருத்துவ கலை, நம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவ்வளவு பிரபலம் இல்லை.ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இத்தகைய பிணசீரமைப்பு முறை சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு உதாரணமாக, இந்தக்கலையை பயன்படுத்தி அமெரிக்க போரில் இறந்து போகும் வீரர்களை,அவர்கள் குடும்பத்தினர் பார்ப்பதற்காக இறந்த உடலை எம்பாமிங் செய்து அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நம்மூரில் பணம் படைத்தவர்கள் இவ்வாறு இறந்த உடலை எம்பாமிங் செய்து பாதுகாப்பதுண்டு.

இது தான் நம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விஷயத்திலும் நடந்திருக்க வேண்டும்.

ஆமாங்க..

நமது பார்வைக்கு சுருக்கம் நிறைந்த அவரது முகம் மற்றும் சிகை பொலிவோடு இருக்க,இந்த surface embalming (தோலின் மேற்பரப்பில் ரசாயனக் கலவையை செலுத்தி பதனிடும் முறை) ஒருவேளை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது அவரது வழுவழுப்பான முகத்தை புகைப்படத்தில் பார்த்தாலே தெரிகிறது.

இந்த விஷயத்தில் வாய் திறக்க வேண்டியவர்கள்,வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்...


எது எப்படியோ....எம்பாமிங் பற்றி விரிவாக தெரிந்த கொள்ள,மறைந்த நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முகத்தில் உள்ள நான்கு மர்மப்புள்ளிகள் காரணமாயிற்று என்றால் அது மிகையில்லை.

இது போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்களை,மக்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக எடுத்து சொன்னால் தான் என்ன...?

ஒருவேளை ரகசியம் வெளிவந்துடும் என்கிற பயமோ......என்னவோ....யார் கண்டா.....?

No comments:

Post a Comment