Friday 9 December 2016

என்னதான் ஆச்சு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு......



சமீப காலமாக கேப்டன் விஜயகாந்த்
அவர்களை உற்றுநோக்கி கவனித்தால் தெரியும்....அவர் உடல் ரீதியாக பெரிய அளவில்  பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு கேப்டன் அவர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு வருகிற காட்சியை பார்க்கும் பொழுது
உண்மையில் நெஞ்சம் பதறுகிறது.

திராவிட கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்று நினைத்தோம்... இருந்தார் சில வருடங்கள் குரலிலும்,நடையிலும்
(அவர் மக்கள் பிரச்சனைக்காக
தனது சிம்மக்குரலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கடந்த கால
சட்டமன்றத்தில் எதிர்த்து கேட்கும் கேள்விகளே அதற்கு சாட்சி).

நான் அவரின் ஆதரவாளனோ, கட்சிக்காரனோ இல்லை. பொதுசனத்தில் ஒருவனாக இந்த கேள்விகளை முன்வைக்கிறேன்.

அந்த சிம்மக்குரல் இன்று காணாமல் போனதற்கான உண்மையான
காரணம் தான் என்ன......?
கனல் கக்கும் அவர் முகத்தில்
பயம் மண்டிக்கிடப்பதன் மர்மம்
தான் என்ன....?
குழந்தை போல வார்த்தைகளை
மறந்து தவிப்பதன் மர்மம் என்ன....?
திடீர் என்று அவர் பேசுகிற வார்த்தையில் மட்டுமல்ல,
நடப்பதிலும் தடுமாற்றம் ஏன்....?
உண்மையில் அவருக்கு என்ன தான் பாதிப்பு..?

ஒரு சிலர் நினைக்கலாம்..அவரை பற்றி கேள்வி எழுப்ப நாம் யார் என்று?

யாராக இருப்பினும் பொதுவெளிக்கு வந்துவிட்டால்,அவரை பற்றி தெரிந்து கொள்வதற்கு அனைவருக்கும் கேள்வி எழுப்ப உரிமை உண்டு.

உதாரணமாக நான் வாக்களிக்காத வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனால்,நான் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் அவர் எனக்கு எம்எல்ஏ தான்.
அவரை பற்றி தெரிந்து கொள்ளவும்,
ஒருவேளை அவர் தவறு செய்தால் தட்டி கேட்கவும் நமக்கு முழு உரிமை உண்டு.

அதுபோலத்தான் நமக்கு கேப்டன் விஜயகாந்த் மேல் ஆயிரம் விருப்பு வெறுப்பு இருப்பினும்,அவரும்
நமக்கு தலைவரே.....
அத்தகைய தலைவரை பற்றி நாம் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.

எல்லாரும் சொல்கிறார்கள்....
அவர் ஒரு குடிகாரர்,அது தான் எந்த நேரமும் தள்ளாடுகிறார் என்று.
அது உண்மையோ,பொய்யோ.....
என்னவென்று என்னை போன்ற சாமானியனுக்கு தெரியாது.

அவர் தற்போது வெறு நடிகர் மட்டுமல்ல; முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவர்,தேமுதிக என்கிற கட்சியின் தலைவர்,மக்களின் சேவகன் என பொறுப்புகளுக்கு சொந்தக்காரர்.

அவரது உடலில் என்ன தான் பிரச்னை என்று,அவரது குடும்பத்தாரும் மற்றும் அவரது கட்சியினரும் தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவர்களது கடமை.

இதனை செய்வார்களா....?

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு உடல்ரீதியான பிரச்சனை வருகிற பொழுது எல்லாம் வெளிப்படைத்தன்மை
காட்டப்படும் பொழுது,ஏன் கேப்டன் அவர்களது உடல் நல விஷயத்திலும் வெளிப்படைத்தன்மை கூடாது என்பது தான்,சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் முன்வைக்கும் கேள்வி.


No comments:

Post a Comment