Sunday 11 December 2016

தாது உப்புக்கள் மனிதனுக்கு அவசியமா....?



நமக்கு தெரிந்தது எல்லாம் சோத்துக்கு போடுற உப்பு தானே....

அதானே...இது என்ன புதுசா தாது உப்பு....?

இதுவும் அது போன்ற ஒருவகையான உப்பு தான்.

ஆமாங்க.......இது வேறு ஒன்றும் இல்லை.மினரல்ஸ்(minerals) தாங்க இவ்வாறு அழைக்கப்படுகிறது.

உதாரணமா மினரல் வாட்டர்னு சொன்னா ஈஸியா புரியும்.
(தாது உப்பு தண்ணீர்னு சொன்னாப்போச்சு.ஏண்டா....காச வாங்கிட்டு உப்பு தண்ணீயா கொடுக்கிறேனு சண்டைக்கு வந்துருவாங்க...நம் மக்கள்)

சரி... அதுல மினரல்ஸ்னு
சொல்ராங்களே... அது என்னவென்று நாம் என்றாவது யோசித்திருக்கோமா....?

பொதுவா தாது உப்புக்கள் கனிமப்பொருளாக இயற்கையில் நீர், பாறை, மண் ,தாவரங்கள் ,மிருகங்கள்
என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவை.

தாவரம்,மண் மற்றும் நீரில் இருந்து தனக்கு தேவையான அதாவது, வளர்ச்சிக்கு அவசியமான தாது உப்புக்களை பெற்றுக்கொள்கிறது.

மனிதன் அத்தகைய தாவரங்களை உண்ணும் பொழுது மற்றும் நீரை அருந்தும் பொழுது இயற்கையாக தாது உப்புக்களை பெறுகிறான்.

மேலும் செயற்கையாக கடலில் இருந்து பெறக்கூடிய உப்பின் மூலம் சில தாது உப்புக்களை பெற்று உடல் மட்டுமல்ல; தன் உயிரையும் வளர்க்கிறான்.

இந்த தாது உப்புக்களை மேக்ரோ-மினரல்ஸ் மற்றும் மைக்ரோ-மினரல்ஸ்
என இருவகையாக அதன் தேவையின் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர்.

இதில் மேக்ரோ-மினரல்ஸ் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இது அன்றாடம் இல்லை என்றால்,வளர்ச்சி என்பதே தடைபட்டுவிடும்.

மாறாக, மைக்ரோ-மினரல்ஸ் என்பது குறைந்த அளவு போதுமானது.இது இல்லை என்றால்,ஒரு சில நாள் கூட தாக்குப்பிடித்து நிற்க இயலும்.

சரி....இந்த தாது உப்பால் மனிதனுக்கு என்ன பிரயோஜனம்.....?

நம் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.அதிலும் மூளை மற்றும் வளர் சிதை மாற்றத்தில் அதீத பங்கு வைக்கிறது.நம் உடம்பில் முடி,பல்,எலும்பு என அனைத்து வளர்ச்சியிலும் இதன் பங்கு அதிகம் தான்.

அதற்காக இந்த உப்புக்கள் அளவுக்கு அதிகம் இருந்தாலும் அல்லது அளவு குறைவாக இருந்தாலும் நம் உடம்பிற்கு பிரச்சனையே....

அதிலும் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள்,வயதானோர்,பாலூட்டும் தாய்மார்கள்,நோயாளிகள் போன்றோர்
சமச்சீர் அளவிலே தான் இந்த உப்புக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சரி நண்பர்களே......

தாது உப்புக்கள் தேவை பற்றி இந்த பதிவில் கண்டோம்.அடுத்த பதிவில் ஒவ்வொரு தாது உப்பு பற்றியும், அதனால் மனிதனுக்கு என்ன நன்மை பற்றியும் விரிவாக சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்.....

No comments:

Post a Comment