Friday 16 December 2016

ட்ரக்கியோஸ்டோமி...செயற்கை சுவாசம்


தமிழக பிரபல அரசியல் தலைவர்கள் நீண்ட நாள்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது,அவர்களுக்கு
என்ன சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே
நம்மை தொற்றிக்கொள்கிறது.

உதாரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மேற்கொள்ளப்பட்ட எக்மோ (ECMO) சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள எத்தகைய ஆர்வம் ஏற்பட்டதோ,அது போன்றே தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு வழங்கப்படும்
ட்ரக்கியோஸ்டோமி (tracheostomy)
என்கிற சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டதால் இந்த பதிவின் மூலம் அந்த மருத்துவ சிகிச்சை முறை பற்றி பகிர்கிறேன்.

ட்ரக்கியோஸ்டோமி..அப்படினா என்ன....?

தொண்டையின் நடுப்பகுதியில் துளையிட்டு,அதற்குள் டியூப்பை செலுத்தப்பட்டு,பின்னர் அந்த டியூப் மூலம் காற்று குழாயை இணைத்து, நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் செயற்கை சுவாச சிகிச்சை முறையே ட்ரக்கியோஸ்டோமி என்பதாகும்.

எப்பொழுது இந்த சிகிச்சை அவசியமாகிறது....?

தொண்டையிலுள்ள மூச்சு குழல் சேதமடைந்திருந்தால்.....

நோய் தொற்று காரணமாக தொண்டையிலிருந்து நுரையீரல் செல்லும் குழாய் பாதிக்கப்பட்டால்...

எப்படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது...?

தொண்டையில் துளையிட்டு டியூப்பை உள் செலுத்திய பிறகு அந்த பகுதியை சுற்றிலும் தையல் போடப்படும்.

தொண்டையில் பொருத்தப்படும் டியூப்பை தேவைப்படும்போது பொருத்திக்கொள்ளவோ அல்லது எடுத்துவிடவோ முடியுமாறு செய்வார்கள்.

ஆனாலும் தொண்டையில் ட்ரக்கியோஸ்டோமி இணைப்பு குழாய் அப்படியே பொருத்தப்பட்டு இருக்கும்.


ஒரு நோயாளிக்கு எப்பொழுது உடல் பூரண குணமாகி,சுவாசம் இயல்பான இயற்கை நிலைக்கு மாறுகிறதோ, அப்பொழுது மட்டுமே இந்த  ட்ரக்கியோஸ்டோமி இணைப்பு குழாய்
அவரது உடலில் இருந்து முழுமையாக நீக்கப்படும்.

இது மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமே.ஆனாலும் இதிலும் முழுகண்காணிப்பு மிகவும் அவசியம். இல்லையேல் நோயாளியின் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படும் அபாயம் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒருபக்கம் தொழில்நுட்பம் வளர வளர,
மறுபக்கம் மருத்துவத்திலும் மெதுவாக இது போன்ற புதிய புதிய சிகிச்சை முறைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவையனைத்தும் காலத்தின் கட்டாயம் என்று சொன்னால் அது மிகையில்லை.

இறுதியாக இந்த சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை விருப்பு வெறுப்பின்றி பூரண நலம்பெற வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment