Thursday 29 December 2016

மக்களே.... நமக்கு உசுரு முக்கியம்


இன்று செய்தித்தாளை எதார்த்தமாக புரட்டும் பொழுது,இந்த செய்தி மிகவும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்படி என்னனு கேட்குறீங்களா...?

செய்தி இது தான்.

இந்தியாவிலேயே அதிகமான சாலை விபத்து ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மேலும் சாலை விபத்தில் வருடந்தோறும் அதிகம் மரணித்தோர் அடங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில்,அதாவது உத்தரப்பிரதேசுக்கு அடுத்த இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்களுடன் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் பதினைந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்தில் மரணித்துள்ளனர்.சரியாக சொன்னால் சாலை விபத்தால் வருடந்தோறும் 15,500 பேர் மரணத்தை அடைந்திருக்கிறார்கள்.

என் கணிப்பு படி,இதற்கு முதன்மை காரணம் ஆக நான் கருதுவது....

மது அருந்தி வண்டி ஓட்டுவது..... செல்பேசியில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவது......
அளவுக்கு அதிகமான வேகத்தில்
வண்டியை ஓட்டுவது....
அஜாக்கிரதையாக வண்டியை
ஓட்டுவது...

ஓய்வில்லாமல் வண்டியினை ஓட்டுவது
(அதிகாலையில் நிகழும் பெரும்பாலான விபத்துகளுக்கு இதுவே காரணமாக இருக்கிறது)...

மேல்குறிப்பிட்ட யாவும் வண்டி ஓட்டும் நபர்களால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் என்றால்........

பயணம் செய்பவர்களின் சேஷ்ட்டை
மற்றும் அஜாக்கிரதையால் ஏற்படுகிற விபத்துக்கள் இன்னொரு ரகம்.

சரி...இது தான் இப்படி என்றால்,நம்மூர் சாலைகள் மற்றும் வாகனங்கள் (இரும்புக்கடைக்கு போக வேண்டியவை இன்னும் நடமாடும் அமரர் ஊர்தியாக
சாலைகளில் வலம் வருகின்றன)
இன்னும் மோசம்.நம்மூர் சாலைகளே பல வாகனங்களை பதம் பார்த்து விடுகிறது.

இதுதான் இப்படி என்றால்......
சரியாக சேவையினை செய்யவேண்டிய சாலை போக்குவரத்து (RTO) அதிகாரிகள் சிலரோ பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு,
மோசமான வாகனங்களை கூட நன்றாக இருப்பதாக சொல்லி சான்றளித்து,பலரை கொல்வதற்க்கு துணைபோகிறார்கள்(சமீபத்தில் கூட பள்ளிக்குழந்தை ஒன்று பள்ளி வாகன ஓட்டை வழியாக விழுந்து இறந்தது  என்ற செய்தியினை கேள்விப்பட்டிருப்பீர்கள்).

இத்தகைய பொறுப்பற்ற தன்மைக்கு அரசு கடும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாது......

மது அருந்தி வண்டி ஓட்டுவோரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் (ஏன் மதுவுக்கே முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது...? நீதிமன்றம் உத்தரவிட்டும், நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பது வேதனையளிக்கும் விஷயமே).

சாலைகளை முறைப்படுத்த வேண்டும். எவ்வாறு என்றால்,வெளிநாட்டில் வேகமாக மற்றும் மெதுவாக செல்ல தனித்தனியாக சாலைகள் இருப்பதை போன்று.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் (ஒன்று தெரியுமா....?
சாலை விபத்துகளில் இறப்போர் பெரும்பாலானோர் தலையில் அடிபட்டு தான்)

நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர் தங்கும் ஓய்வறைகளை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் இரு ஓட்டுநர் முறையினை அமல்படுத்த வேண்டும் (இதன் மூலம் ஓய்வில்லாமல் வண்டி ஓட்டி அதன் மூலம் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்).

நீங்க சொல்றது எல்லாம் சரி. சாலையில் ஓரமாக நடப்போரையும் மற்றும் சாலையோரத்தில் உறங்குவோரையும் எற்றிக் கொல்கிறார்களே...அவர்களை என்ன செய்றது...? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

மனிதம் செத்து விட்டது என்பதை தவிர்த்து வேற என்ன சொல்றது (மனிதனை தண்டிக்கலாம்.....
மிருகத்தை....?)

எது எப்படியோ...இனியாவது நம் உயிரோடும்,உடலோடும் விளையாடாமல் எச்சரிக்கையாக இருப்போம்.

மரணம் நம்மை தேடி வந்தால்,
அது நம் தப்பில்லை.
ஆனால்......
அதுவே மரணத்தை நாம் தேடி சென்றால்,அது நம் தவறு தானே.

என்ன தான் சொல்லுங்க மக்களே....
நம் உசுரு நமக்கு மட்டுமல்ல;
நம் குடும்பத்துக்கும் முக்கியம்.

No comments:

Post a Comment