Thursday 15 December 2016

ப்ளீஸ்....இன்றோடு மைதாவை மறந்துருங்க.



இன்றைய காலகட்டத்தில்,மைதா மாவு இல்லாத உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது என்பது மிகவும் கடினமான காரியம்.அந்த அளவிற்கு பேக்கரி உணவில் இருந்து துரித உணவான
பீட்ஸா வரை எங்கும் நீக்க மற நிறைந்திருக்கிறது.

சரி.......இந்த மைதா மாவு எப்படி செயற்கையாக தயாரிக்கப்படுகிறது மற்றும் இந்த மைதா மாவினால் தயாரிக்கப்படும் உணவினால் நமக்கு என்ன பிரச்சனை போன்ற பல கேள்விகளுக்கு விடை காணவே இந்த பதிவு.

பொதுவாக மைதா மாவு கோதுமையில் இருந்து பெறப்படுகிறது.கோதுமை தானியமானது நார்ச்சத்து,புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது.

இத்தகைய கோதுமை தானியம் மூன்று அடுக்குகளை உடையது.அதில் முதல் அடுக்கு பிரான்(bran),இரண்டாம் அடுக்கு ஜெர்ம்(germ) மற்றும் மூன்றாம் உள்ளடுக்கு எண்டோஸ்பெர்ம் (endosperm).

இந்த எண்டோஸ்பெர்ம் அடுக்கில் இருந்து தான் நாம் உண்ணுகிற ஸ்டார்ச் நிறைந்த மைதா மாவு பெறப்படுகிறது.

கோதுமையில் இருந்து முழுக்க முழுக்க புரதம் மற்றும் நார்ச்சத்து பிரிக்கப்பட்டு பெறப்படும் வெறும் சர்க்கரை சத்து மட்டும் நிறைந்த மாவுப்பொருளே மைதா.

இதனை பிரித்தெடுக்க மட்டுமல்லாது ப்ளீச் செய்ய அதாவது சுத்தப்படுத்த பென்சோயில் பெராக்சைடு(benzoyl peroxide) என்கிற கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.இது தான் மைதா மாவு பளிச்சென்று வெள்ளையாக மிளிர்வதற்கு காரணமாகிறது.பொதுவாக இந்த கெமிக்கல் துணி வெளுக்க பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. பற்கள்,முடி போன்றவற்றை ப்ளீச் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாருங்க...நண்பர்களே......
இத்தகைய சுத்தப்படுத்தி வெளுக்கும் சக்தி மிக்க கெமிக்கல் தான்,அன்றாடம்
நாம் உண்ணும் மைதா மாவினால் தயாரிக்கப்பட்ட உணவின் மூலம் நம் உடலுக்குள் செல்கிறது.

இது கேன்சர் உருவாக்க தூண்டுகோலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஆனாலும் இது நேரடியாக கேன்சர் உருவாக்கும் காரணியாக இதுவரை அறியப்படவில்லை என்பது ஒருவகையில் மைதா பிரியர்களுக்கு சந்தோசமான செய்தியே....!

ஆனாலும் இன்னொரு கெமிக்கலான அலோக்ஸான் (alloxan),மைதா மாவு மென்மையாக மற்றும் மிருதுவாக இருக்க சேர்க்கப்படுகிறது.

இந்த கெமிக்கல் சர்க்கரை நோய் உருவாக  காரணம் ஆகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா.....?

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும், ஏனென்றால்....அது தானே உண்மை.

ஆமாங்க...இந்த கெமிக்கல் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் வாய்ந்த இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யும் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்தொழிக்கிறது என்பதனை அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த பீட்டா செல்கள் அழிவதன் மூலம் இன்சுலின் உற்பத்தி தடைபட்டு,நம் உடம்பானது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறும்.

அப்புறம் என்ன....உயர் சர்க்கரை அளவு குறியீட்டை(GI) எட்டி நம்மை நிரந்தர நீரழிவு நோய் உள்ளவராக மாற்றுவதோடு உயிருக்கும் உலை வைத்து விடும் என்றால் பார்த்துக்கொங்க...!

இவை போக....சிட்ரிக் அமிலம்,மினரல் ஆயில்,அஜினமோட்டோ,சோடியம் மெட்டா பை சல்பேட் மற்றும்
பென்சோயிக் அமிலம் போன்றவையும்
மைதா மாவு கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களில் பல்வேறு காரணங்களுக்காக சேர்க்கப்படுகிறது.

இதில் குறிப்பாக மினரல் ஆயில் (mineral oil) மற்றும் அஜினோமோட்டோ (ajinomoto) போன்றவை நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்று சீனா உட்பட பல நாடுகளில் உணவுப்
பொருள்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாம் தாம் இன்னும் இவற்றை உணவு சுவைக்காவவும் மற்றும் உணவு
கெடாமல் இருக்கவும், இவற்றை இன்றுவரை பயன்படுத்தி நம் உடம்பை கெடுத்து கொண்டு வருகிறோம்.

இது போன்ற உடலுக்கு தீங்கும் செய்யும் பொருள்களை உணவு தயாரிப்பில் பயன்படுத்த தடை
செய்யும் விதமாக மத்திய அரசோ, மாநில அரசுகளோ எந்த ஒரு உருப்படியான முடிவும் இதுவரை
எடுக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை.மேலை நாடுகளை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் இன்னும் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை.

மேலும் இந்த வெள்ளை மைதாவில் உள்ள கிளியடின் (Gliadin) புரோட்டீன், பசியின்மையை உருவாக்குகிறது.

இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தால் பசி என்பதே இல்லாமல்,சாப்பிட்டாலும் சாப்பிட்டது போன்ற உணர்வே நமக்கு இல்லாமல் செய்துவிடும் வன்மை இந்த புரோட்டினுக்கு உண்டு.

மைதா மாவினாலான
உணவுப்பொருள்களை தொடர்ந்து
உண்பதனால் எதிர்காலத்தில் உங்கள் உடம்பு எதிர்நோக்கும் பிரச்சனைகள்......

உடல் எடை தொடர்ந்து அதிகமாகி இறுதியில் உடல் பருமனை உருவாக்கும்.

கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும்.

அலர்ஜி ஏற்படுத்தவல்லது.

அல்சீமர் நோயினை உருவாக்கும்.

பசியின்மையை உருவாக்கும்.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

இதய நோய்,கீல்வாதம்,மூட்டு வலி, தோலில் அரிப்பை உண்டாக்கும்.

வீக்கத்தை உண்டு பண்ணும்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்கும்.

சுரப்பிகளின் செயல்பாட்டை குறைக்கும்.

வயிறு மந்தம் உண்டாகும்.

அஜீரணக்கோளாறு உண்டு பண்ணும்.

நீங்களே சொல்லுங்க மக்களே.... இத்தகைய கேடு விளைவிக்கும் மைதா மாவினால் செய்யப்பட்ட பரோட்டா முதல் பேக்கரி ஐட்டங்கள் வரையிலான அனைத்து விதமான துரித மற்றும் சுவையூட்டும் உணவுப்பொருள்கள்
நமக்கு தேவைதானா....?

மைதா இல்லாத துரித உணவை தவிர்ப்பது கடினம் என்றாலும்,நம் எதிர்காலம் காலம் கருதி தவிர்க்க முயற்சி செய்யலாமே...!

நம் உடம்பிற்கு கேடு விளைவிக்கும்
மைதா மாவினால் ஆன உணவுப் பொருள்களுக்கு இன்று முதலாவது
முற்றுப்புள்ளி வைப்போம்.

நம் ஆயுளை கொஞ்சமேனும் நீட்டிப்போம்....

No comments:

Post a Comment