Saturday 3 December 2016

உடம்பு சொல்வதை கொஞ்சமாவது கேளுங்க....


என்னது....உடம்பு சொல்றதை கேட்கணுமா...?

இது என்ன புதுசால்ல இருக்குன்னு நினைக்குறீங்களா.....

ஆமாங்க.....நம்மில் எத்தனை பேர்
நம் உடம்பு சொல்வதை கேட்கிறோம் என்றால்,'இல்லை'என்பது தான் அனைவரின் பதிலாக இருக்கும்.

உடம்பில் இருக்கும் நாவிற்கு கொடுக்கிற மரியாதையை மற்ற உறுப்புகளுக்கு என்றாவது நாம் கொடுத்திருக்கிறோமா..... ?

வாயைக் கட்டுப்படுத்தினால்
நோய் ஒருபோதும் நம்மை
அண்டுவதில்லை.

மாறாக...நாக்கு சொல்லிற்கு
நாய் போல,நாம் வால் ஆட்டி கொண்டிருந்தால் ஒட்டுமொத்த
உடம்பும் பாழாய் போய்விடும்.

நாம் சாப்பிடும் உணவு நம் அரை
வயிறு நிரம்பியவுடன்,நம் உடம்பு
எச்சரிக்கை மணி அடிக்கும்.
ஆனால் நாமோ நாவின் ருசிக்கு அடிமையாகி முழுவயிறையும்
நிரப்பி செரிக்க வழியில்லாமல்,
செரிப்பதற்காக கண்ட கண்ட செயற்கை பொருள்களை உள்செலுத்த, செரிக்காத உணவோ மேல்வாய் வழியாக மேலேயும்,கீழ்வாய் வழியாக கீழேயும் வேறுவழியின்றி வெளித்தள்ளப்படுகின்றது.

சிலசமயங்களில் என்னத்த உள்ளே செலுத்தினாலும் வயிறு மந்தமாகி, வெளியே வராது உடம்பை படாதபாடு படுத்துவிடும்.

ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு சாப்பிட்டு,இரைப்பையினை பலூன் போல பெரிதாக்கி,உடல் எடை கூடி நோயோடு ஆயுள் முழுக்க போராடிக்கொண்டிருப்பார்கள்.

நீங்களே சொல்லுங்கள் இந்த வேதனை தேவையா.....?

எதையும் அளவோடு சாப்பிட்டால் உணவு கூட அமிர்தம் தான்;
மாறாக அளவுக்கு மீறினால் உணவு கூட விஷமாக மாறிவிடும் என்பதை மறந்து விடாதீங்க.

வாயினில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்தால் போதாது;
வாயினுள் நுழையும் உணவிற்கும் கட்டுப்பாடு விதியுங்கள்.

நாம் வாழும் நாளை கொஞ்சம் அதிகப்படுத்தலாம்.....

No comments:

Post a Comment