Monday 12 December 2016

ஆமா...அது என்ன புயல் எச்சரிக்கை கூண்டு......?


பொதுவாக கடலில் காற்று அழுத்த தாழ்வு நிலை ஏற்படும் பொழுது,கடலை ஒட்டிய மற்றும் துறைமுக பகுதிகளில் மீனவ மற்றும் அனைத்து பொதுமக்களையும் புயல் எச்சரிக்கை செய்யும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டினை ஏற்றுவதுண்டு.

அது இத்தனாவது எண் புயல் எச்சரிக்கை கூண்டு என காட்சி மற்றும் ஒலி ஊடகங்கள் வாயிலாக நாம் கேள்விப்படுவதுண்டு.உண்மையில் அந்த எச்சரிக்கை செய்யும் ஒவ்வொரு எண்ணும் உண்மையில் நமக்கு என்ன தான் சொல்கிறது என்பதை இந்த பதிவில் விரிவாக காண்போம்...

எண்:1
ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறு உள்ளது என்பதனை தெரிவிக்கும்.

எண்:2
புயல் ஒன்று உருவாகியுள்ளது என எச்சரிக்கை செய்கிறது.

எண்:3
திடீர் காற்றோடு மழை பெய்யும் நிலை என துறைமுகத்துக்கு எச்சரிக்கை செய்கிறது.அதனால் துறைமுகத்தில் இருக்கும் படகுகள் மற்றும் கப்பல்கள்
தகுந்த பாதுகாப்புடன் நிறுத்தப்படும்.

எண்:4
துறைமுகம் மற்றும் கடல் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது.இந்த வேளையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது.

எண்:5
துறைமுகத்துக்கு இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கை செய்கிறது.

எண்:6
துறைமுகத்துக்கு வலது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கை செய்கிறது.

எண்:7
துறைமுகம் மற்றும் அதன் சுற்றிய  பகுதிகளுக்கு ஆபத்துகள் அதிகம் என எச்சரிக்கை செய்கிறது.

எண்:8
துறைமுகத்துக்கு இடது புறமாக புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கை செய்யும்.

எண்:9
துறைமுகத்துக்கு வலது புறமாக புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கை செய்யும்.

எண்:10
துறைமுகம் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள ஊர்களுக்கு அபாய நிலை என்று முன் எச்சரிக்கை செய்யும்.

எண்:11
புயலானது பேரழிவினை உண்டாக்கும் எனவே,மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல எச்சரிக்கை செய்கிறது.



என்ன நண்பர்களே....
புயல் எச்சரிக்கை கூண்டு எண்ணை சொன்னாலே நீங்கள் இனி அலெர்ட் ஆய்விடுவீர்கள் தானே...

புயல் எச்சரிக்கை கூண்டு நிறுவுவதன் அவசியத்தை இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் உணர்த்தியிருக்கும்  என நான் நம்புகிறேன்.

அடுத்த பதிவில் இன்னொரு தகவலோடு சந்திக்கிறேன்.... நன்றி.

2 comments:

  1. உண்மையில் செய்தி படிக்கையில்
    அது என்ன எண் கணக்கு என
    யோசித்ததுண்டு
    அதைத் தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete