Friday 2 December 2016

தினம் ஒரு கீரை-அகத்தி


நமக்கு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய காய்கறி வகைகளில் ஒன்று தான் கீரை. நம் வீட்டிலேயே எளிதில் வளர்க்கலாம்.

அன்றாடம் ஒரு கீரை வகையினை உணவில் சேர்த்து கொள்வது,நம் உடலுக்கு நலம் பயக்கும்.

கீரை வகைகளில் ஏராளம் உண்டு. அதில் இன்று அகத்திக்கீரை பற்றி இப்பதிவில் காண்போம்.....

அகத்திக்கீரையின் இலை, வேர், காய் பட்டை, பூ என அனைத்து விதமான பகுதிகளும் உணவாக பயன்படுகிறது.

இது மருந்து முறிவுக்கீரை என்றும் அழைக்கப்படுவதுண்டு.காரணம் பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டால்,அந்த மருந்தை முறிக்கும் சக்தி கொண்டது.

அப்படி என்ன இருக்கு அகத்திக்கீரையில்........?

நீர்ச்சத்து
இரும்புச்சத்து
கால்சியம்
புரதம்
கொழுப்பு
சுண்ணாம்புச்சத்து
நார்ச்சத்து
நிக்கோடினிக் அமிலம்
தாதுஉப்புக்கள்
மாவுச்சத்து
மெக்னீசியம்
பாஸ்பரஸ்
ரிபோஃப்ளோவின்
வைட்டமின்-A
வைட்டமின்-C
தயாமின்

நம் உடம்பிற்கு செய்யும் நன்மைகள் தான் என்ன....?

வயிற்றுக்கோளாறு
வயிற்றுப்புண்
மலசிக்கல்
உடல்சூட்டை சமன்செய்கிறது
தொண்டைப்புண்
குடல்புண்
கண்பார்வை நரம்பை பலப்படுத்த
அரிப்பு
பித்தம்
காய்ச்சல்
இரத்த கொதிப்பு
சொறிசிரங்கு
தொண்டைவலி
மூட்டுவலி
எலும்பினை வலுப்படுத்த
நரம்பினை வலுப்படுத்த
பற்கள் வலுப்பெற

மேலே குறிப்பிட்டது எனக்கு தெரிந்ததே; எனக்கு புலப்படாத நிறைய பலன்கள் இந்த கீரையினால் உண்டு.

குறிப்பாக இதனை சூப்பாக வைத்து சாப்பிடலாம் அல்லது பருப்புடன் வேகவைத்து சாப்பிடலாம்.

என்ன நண்பர்களே......
மேலே உள்ள அகத்திக்கீரை பற்றிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என நான் நம்புகிறேன்.

அடுத்த பகுதியில் மற்றொரு வகை கீரை பற்றி சொல்கிறேன்.அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்....

No comments:

Post a Comment