Monday 26 December 2016

தங்கமோகத்தில் தகிக்கும் தமிழகம்..


இரண்டு நாளாக இணையத்தில் எந்த செய்தி தளத்தை திறந்தாலும்,இந்த செய்தி நம் கண் முன்னே வந்து பல் இளித்து நிற்கிறது.

ஆமாங்க...அது வேற ஒன்றுமில்லை...
நம் நாட்டில் உள்ள தங்கமோகம் பற்றியது தான்....

நாட்டிலேயே  தங்கமோகத்தில் புதைந்து கிடக்கும் மாநிலங்களில் நம் தமிழகம் இடம்பெற்று இருக்கிறது என்றால் பெரிதாக நமக்கு ஒன்றும் வியப்பு இருக்க போவதில்லை.

காரணம்...இதற்கு நம்மூரில் தெருக்கு தெரு காலம்காலமாக புதிது புதிதாய் முளைத்து நிற்கும் நகைக்கடைகள் மற்றும் நகைக்கடன் தரும் நிதி நிறுவனங்களுமே சாட்சி.

நாட்டிலேயே சரி நம்மாளுங்க தங்கமோகத்தில் எத்தனாவது இடம் பிடித்திருக்கிறார்கள் என முதலில் பார்ப்போம்....

கிராமப்புற அளவில் நாட்டிலேயே கேரளாவிற்கு அடுத்த படியாக அதாவது இரண்டாம் இடத்தில் உள்ளது நம்  தமிழகம் (நம் கிராமப்புற மக்கள் சராசரியாக 1,08,094 ரூபாய்க்கு தங்கம் வச்சுருக்காங்களாம்).

நகர்ப்புற அளவில் கோவாவிற்கு அடுத்த படியாக அதாவது மூன்றாவது இடத்தில் உள்ளது நம்  தமிழகம்
(நம் நகர்ப்புற மக்கள் சராசரியாக
1,86,738 ரூபாய்க்கு தங்கம் வச்சுருக்காங்களாம்).இதுலயும் ஒண்ணாவது இடத்தில் கேரளா தான் இருக்காம்.


ஒப்பீட்டளவில் பார்க்கும் பொழுது, தமிழக நகர்ப்புற அளவில் அதிக தங்கமோகம் இருப்பதாக தோன்றும்.
ஆனால் ஒட்டுமொத்த அளவில் பார்க்கும் பொழுது,தமிழக கிராமப்புறங்களில் தான் அதிக
தங்கநகை மீதான மோகம் உள்ளது என்பதே எதார்த்த நிலவரம்.

இன்னொன்று தெரியுமா....?

மிசோரம் மக்கள் தான்...
கிராம மற்றும் நகர்ப்புற அளவில் நாட்டிலேயே குறைந்த அளவிலான
தங்கத்தை கையிருப்பில்
வைத்திருப்பவர்கள்.

ஒரு வேளை சிறுமாநிலம் என்பதால... இல்லை..உண்மையில் தங்கமோகம் இல்லாதவர்களா....?
இல்லை.... ஏழ்மை நிலையில் இருக்கிறார்களா என்பதால....

என்ன காரணம்....என்று தெளிவான விவரம் இதுவரை தெரியவில்லை.

ஏதோ ஒருவகையில் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கும்,இந்த
கையிருப்பு தங்கத்திற்கும்
தொடர்பு உண்டு,என்பதால் யாரும் இதனை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது.


ஒன்று மட்டும் புரிகிறது.....
தங்கம் என்கிற கையிருப்பை வைத்து பார்க்கிற பொழுது,நாட்டிலேயே நம்மாளுங்களும் ஒருவகையில்
பணக்காரங்க தான்...

அடுத்த வருடம் தமிழ்நாடு தங்க மோகத்தில் முதலிடம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

No comments:

Post a Comment