Sunday 9 October 2016

நெஞ்சு பொறுக்குதில்லையே.....1


ஆராதனா....

தன் குடும்பத்திற்காக
பதிமூணு வயதில்
பட்டினி கிடந்து
பரலோகம் சென்ற பதுமை...

பெற்றோர் சொல்லை
தட்டாத பிள்ளை;
ஆதலால்,இன்று அவள்
உயிரோடு இல்லை...

வாழ்ந்து முடித்தவர்கள் செய்கிற உண்ணாநோன்பினை
வாழ வேண்டிய வயதில் செய்து
தன் உயிரை துறந்தவள்...

நான் கேட்கிறேன்...........

68 நாட்களாக
ஆகாரம் சாப்பிடாமல்
அப்படி என்ன ஒரு சாதனை வேண்டிகெடக்கு...
அதனை கொண்டாட
அம்மாநில அமைச்சர் வேற...

அன்று இந்த பெண்ணின்
நோன்பு முடிப்பை
சாதனை என சொன்னவர்கள்,
இன்று
வேதனை என சொல்கிறார்கள்...

ஊரார் பேச்சை கேட்டு
தன் பிள்ளை உயிருக்கே
உலை வைத்த பெற்றோர்
உண்மையில் மனிதப்பிறவிகள் தானா..

பள்ளிக்கு செல்லவேண்டிய வயதில்
இந்த பெண்ணின் வாயில்
பால் ஊற்றி பரலோகம் அனுப்பிவிட்டார்களே! பாவிகள்...

இது போன்ற மூடநம்பிக்கையால் மூழ்கிப்போன சமூகத்தை மீட்கப்போவது யாரோ...

இனியாவது இந்த மூடநம்பிக்கையை தூக்கி எறிந்து விடுங்கள்...

வரும் கால சந்ததிகளாவது நிம்மதியாக வாழ்ந்துவிட்டு போகட்டும்.

இதுவே கடைசி ஆராதனவாக இருக்கட்டுமே....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment