Friday 7 October 2016

ருசியான மொறுமொறு சீவல்...


சீவல் என்றால் நினைவுக்கு வருவது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காரணம் அதன் தனி ருசி.

அந்த ருசியான சீவலை நாமும் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் மிக எளிமையாக...

இதனை செய்ய தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி மாவு
கடலை மாவு
உப்பு
தண்ணீர்
பெருங்காயத்தூள்
சீரகத்தூள்
மிளகாய்த்தூள்
எண்ணெய்....

சரி வாங்க எப்புடி செய்யலாம்னு பாக்கலாம்...

முதலில் நன்கு சலித்து எடுத்த புழுங்கரிசி மாவு மற்றும் கடலை மாவு ,
அப்புறம் ஒன்றன் பின் ஒன்றாக மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள், சீரகப்பொடி, உப்பு என வரிசையாக
சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு பிசைய வேண்டும்.

குறிப்பாக கையில் ஒட்டாத மற்றும் மென்மையாக வரும்வரை பிசைய வேண்டும்.

மென்மையாக வருவதற்கு சிறிது நெய்யோ அல்லது எண்ணெயோ சேர்த்தால் போதும்...மிருதுவாக மாறிவிடும்.

அப்புறம் என்ன.. சீவல் உரலில் வைத்து பிழிந்து எண்ணெயில் விட்டால் போதும்,சிறிது நேரத்தில் ருசியான அருப்புக்கோட்டை சீவல் உங்கள் வீட்டிலேயே தயார்.


குறிப்பாக மிதமான தீயில் அடுப்பை வைத்து பயன்படுத்தும் போது நன்றாக வெந்தும் மொறுமொறுப்பாக வரும்.. தீயாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

என்ன செய்ய தயாராகிட்டீங்களா...


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


No comments:

Post a Comment