Friday 14 October 2016

பேலியோ உணவுமுறைக்கு மாறலாமே.....


பேலியோ உணவுமுறை என்பது பழங்கற்கால,குகை வாழ் மனிதர்கள் உணவுமுறையாகும்.

பேலியோலித்திக் என்கிற பழங்கற்காலத்தில் பின்பற்றிய உணவுமுறை.ஆகவே இதன் பெயர் இயல்பாகவே மறுவி பேலியோ என்றானது.

அக்காலத்தில் மனிதர்கள் வேட்டை ஆடுபவர்களாகவும்,உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தனர்.
மேலும் அவர்கள் காய்கள், கனிகள், வேர்கள், கொட்டை வகைகள், மீன்கள் போன்றவற்றை உண்டு வாழ்ந்தனர்.

சரி விசயத்திற்கு வர்றேன்....

பொதுவாக நம் உடம்பு கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் ஆகிய இரண்டு சக்திகளால் இயங்குகிறது.

மாவுச்சத்து உணவுகளால் குளுக்கோஸ் சக்தி கிடைத்து உடல் இயங்குவது நடைபெற்றாலும், அதிகப்படியான குளுக்கோஸ் சார்ந்த மாவுச்சத்து உணவுகளால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து  எடை கூடுகிறது.

ஆனால், கொழுப்பு சார்ந்த உணவுகள், பசியை அடக்கி, உயர்தர கொழுப்பு மற்றும் புரதத்தை உடலுக்குத் தந்து உடல் எடையைக் குறைக்கிறது.மேலும்
ரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்தும், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களையும் அளித்தும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

பேலியோ டயட்டின் அடிப்படையே, உடலின் ரத்த சர்க்கரையை அபரிமிதமாக ஏற்று, உடல் கட்டமைப்புக்கு உதவும் கணையம் சுரக்கும் இன்சுலின் ஹார்மோனை அதன் இயற்கையான வேலைக்குப் பயன்படுத்துவதேயாகும்.

மேற்கூறிய காரணங்களால் பேலியோ டயட்டின் தேவை நிகழ்காலத்திற்கு அவசியமாகிறது.

சரி வாங்க இந்த உணவுமுறையில் என்ன சாப்பிடலாம்,என்ன சாப்பிடக்கூடாது,என்பதனை பற்றி காண்போம்....



பேலியோ டயட்டில் உண்ணக்கூடிய உணவுகள்:
பச்சை காய்கறிகள்
பாதாம்
பிஸ்தா
மஞ்சள் கருவுடன் முட்டைகள்
கொழுப்புடன் கூடிய இறைச்சி
கடல் உணவுகள்
நெய்
வெண்ணெய்
சீஸ்
பனீர்
முழுக்கொழுப்பு பால்
தயிர்
மோர்
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்
நல்லெண்ணெய்
அனைத்து வகை கீரைகள்

பேலியோ டயட்டில் தவிர்க்கவேண்டிய உணவுகள்:
தானிய வகைகள்
சக்கரை கலந்த குளிர்பானம் பதப்படுத்தப்பட்ட பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருள்கள்
உப்பு சார்ந்த பொருள்கள்
பதப்படுத்திய பால் பொருள்கள்
எண்ணெயில் பொரித்து பேக் செய்யப்பட்ட பொருள்கள்

உணவே மருந்தாக ஆரோக்கியம் பேணும் இந்த உணவுமுறையினை பின்பற்றி நாம் அனைவரும் நோயில்லாமல் நலமுடன் வாழவேண்டும் என்பதே என் ஆசை.

No comments:

Post a Comment