Monday 3 October 2016

கடைசியில் கழுத்தறுத்த மத்திய மோடி அரசு...


நேற்றுவரை காவேரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று சொன்ன மத்திய நீர்வள அமைச்சகம், இன்று தன் வழக்குஅறிஞர் வாயிலாக வாரியம் அமைக்க முடியாது என சொல்வதன் அர்த்தம் என்ன?

இத்தகைய முரண்பாட்டை எடுக்க மூளையாக செயல்பட்டவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் அமைச்சர் உமாபாரதி என்பது இந்த முடிவின் மூலம் தெரிகிறது.

அடுத்த ஆட்சியினை
கர்நாடகாவில்  பிஜேபி
பிடிக்க வேண்டும் என்றால் இவ்வாறு செய்ய வேண்டும் என எந்த மடையன் உங்களுக்கு போதித்தது.

திரு மோடி அவர்களே,
உங்கள் அரசு செய்கிற பிழையை நீங்கள் வேண்டும் என்றால் மறக்கலாம்.
ஆனால் மனசாட்சி உள்ள மக்கள் ஒருபோதும் மறக்கவோ,மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதனை
நீங்கள் விரைவில்
உணர்வீர்கள்.

தமிழர்களால் நமக்கு ஒன்றும் பயனில்லை என்று நினைப்பீர்கள் என்றால் அதற்கு காரணம் இது போன்ற தவறான நடவடிக்கைகள் தான் என்பதை மறக்காதீர்.

முதலில் ஜல்லிக்கட்டு இப்பொழுது காவேரி என உங்கள் குள்ளநரி வேலையை தமிழர்க்கு எதிராக செய்துகொண்டே இருக்கிறீர்கள்.

ஏன் தமிழ்நாடு அவ்வளவு கிள்ளுக்கீரையாக உங்களுக்கு தெரிகிறதா?

காங்கிரஸ் செய்த பிழையினை நீங்களும் செய்கிறீர்கள்.
அதற்கான பயனை அவர்களை போல் நீங்களும் அடைவீர்கள், என்பதற்கு இது போன்ற தமிழர் நலனுக்கு எதிரான உங்களின் நடவடிக்கையே சாட்சி.

அது என்ன இருநபர் அமர்வு வழங்கிய தீர்ப்பு செல்லாது,மூன்று நபர் நீதிபதி அமர்வு தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு தர முடியும் என்கிறீர்களே..?
எத்தனை நீதிபதிகள் விசாரித்தாலும் நீதி ஒன்றுதானே..

நாங்கள் தேர்ந்தெடுத்த உங்களை நம்புவதைவிட நீதிபதிகளை நம்பலாம் என இந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

அவர்கள் தீர்ப்பு வழங்கிய பிறகும் இத்தனை நாளாக வாரியம் அமைப்போம் என வாய்ச்சவடால் விட்டீர்களே... இன்று மட்டும் ஏன் முடியாது என நாடகமாடுகிறீர்கள்.

உச்சநீதி மன்றத்தை அவமதித்தது கர்நாடக மட்டுமல்ல; நீங்களும் தான் என்பதை மறந்துடாதீங்க மத்திய மோடி அரசே...

நீதி ஒரு நாள் நிச்சயம் வெல்லும்,
அதுவரை பொறுமையாக காத்திருப்போம்.

குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment